Chennai Video
Latest Buzz...
Flash News
47th International Film Festival of India
The 47th International Film Festival of India will begin...
Apple CEO Mr Tim called on Mr Modi today
The CEO of Apple Inc., Mr. Tim Cook, called...
Bank employees to go on strike on July 29
Bank employees across the country will go on a...
Cyclone moves towards Bangladesh
Cyclonic winds bypassed the Indian coast and moved towards...
Summer Special Trains
Southern Railway will operate the following Suvidha special trains...
  • May 23, 2012
  • Chennai VIdeo Administrator
  • Cinema

May 23rd, 2012
இன்டர்நேஷனல் டிரைவிங் லைசன்ஸ் எடுத்த சந்தானம்

ஹீரோ, ஹீரோயின் இல்லாமல் கூட தமிழ் சினிமாவில் ஒரு படம் உருவாம். ஆனால், தற்போது இருக்கும் சூழ்நிலையில் காமெடி நடிகர் சந்தானம், இல்லாமல் எந்த படமும் இல்லை. அந்த அளவுக்கு பிஸியாக இருக்கும் சந்தானம் ‘தாண்டவம்’ படத்திற்காக இன்டர்நேஷனல் டிரைவிங் லைசன்ஸ் எடுத்திருக்கிறார்.

மதராசப்பட்டினம் விஜய் இயக்கும் ‘தாண்டவம்’ படத்தில் விக்ரம், எமி ஜாக்சன், அனுஷ்கா ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் சந்தானமும் நடிக்கிறார். இந்தப் படத்தில் சந்தானத்திற்கு உசிலம்பட்டியில் இருந்து சட்டவிரோதமாக விசா பெற்று வெளிநாட்டுக்கு சென்று, அங்கு கார் ஓட்டுனராக வேலை பார்க்கும் கதாபாத்திரம். இதனால் சந்தானம் கார் ஓட்டுவது போன்ற காட்சிகள் எடுக்க வேண்டும் என்பதற்காக, அவர் இன்டர்நேஷனல் டிரைவிங் லைசன்ஸ் பெற்றுள்ளார்.

தற்போது லண்டனின் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டிருக்கும் சந்தானம், லண்டன் முழுக்க எங்கு வேண்டுமானாலும் காரை ஓட்டிச் செல்லலாம் என்கிறார்கள்