Chennai Video
Latest Buzz...
Flash News
47th International Film Festival of India
The 47th International Film Festival of India will begin...
Apple CEO Mr Tim called on Mr Modi today
The CEO of Apple Inc., Mr. Tim Cook, called...
Bank employees to go on strike on July 29
Bank employees across the country will go on a...
Cyclone moves towards Bangladesh
Cyclonic winds bypassed the Indian coast and moved towards...
Summer Special Trains
Southern Railway will operate the following Suvidha special trains...
  • May 31, 2012
  • Chennai VIdeo Administrator
  • Cinema

May 31st, 2012
உருமி பார்க்க வேண்டிய படம் !

இந்தியாவுக்கு முதல் முறையாக கடல்வழியை கண்டு பிடித்தவர் வாஸ்கோடகாமா என்று நாம் பள்ளியில் படித்திருக்கிறோம். இந்தியாவை கண்டுபிடித்தது யார்? என்ற கேள்விக்கு வாஸ்கோடகாமா என்று பதில் எழுதி மதிப்பெண்களும் பெற்றிருக்கிறோம். போர்ச்சுகீசியரான வாஸ்கோடகாமா தான் இந்தியாவை அடிமையாக்க முயன்ற முதல் அன்னியர் என்பதை மட்டும் நாம் அவ்வளவு அழுத்தமாக படித்தது இல்லை என்று தான் தோன்றுகிறது.அப்படி நாம் படிக்காத விஷயத்தை ‘உருமி’ படத்தின் மூலம் மிக அழுத்தமாக இயக்குநர் சந்தோஷ் சிவன் சொல்லியிருக்கிறார்.

கதைப்படி இன்றைய நூற்றாண்டில் தொடங்கும் படம் பிறகு அப்படியே 15ஆம் நூற்றாண்டில் பயணிக்கிறது. இன்றைய காலகட்டத்திலும் நம்மை அன்னியர்கள் ஏதோ ஒரு வழியில் அடிமையாக்கி வருகிறார்கள் என்பதை உணர்த்தும் வகையில் இதுபோன்ற திரைக்கதை அமைப்பை இயக்குநர் கையாண்டு இருக்கிறார்.

வெளிநாட்டில் இருக்கும் பிரித்விராஜ், தனது தொழிலில் ஏற்பட்ட நஷ்ட்டத்தினால், இந்தியாவில் தனக்கு இருக்கும் சொத்தான கண்ணாடி காடு என்ற இடத்தை வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுக்கு விற்பதற்காக இந்தியாவுக்கு வருகிறார். அந்த இடத்தில் மலைவாழ் மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அந்த மலைவாழ் மக்களின் குழந்தைகளுக்கு பள்ளி ஒன்றை அந்த இடத்தில் வித்யாபாலன் நடத்தி வருகிறார். பிரித்விராஜ் அந்த இடத்தை விற்பது அந்த காட்டுக்கும், அந்த மக்களுக்கும் பாதிப்பு என்று வித்யாபாலன் எடுத்து கூறினாலும், அதை கேட்காமல் பிரித்விராஜ் பிடிவாதமாக விற்க முயல்கிறார். அந்த சமயத்தில் அந்த காட்டில் வாழும் குகை மனிதர்களில் ஒருவரான ஆர்யா, பிரித்விராஜை சந்தித்து பிரித்விராஜ் யார்? அவருக்கும் இந்த கண்ணாடி காட்டுக்கும் என்ன தொடர்பு என்ற உண்மையை விவரிக்கிறார்.
அப்போதுதான் 15ஆம் நூற்றாண்டின் கதை ஆரம்பிக்கிறது. இந்தியாவுக்கு கடல் வழியாக வரும் வாஸ்கோடகாம சேரநாட்டில் அதாவது கேரளாவில் உள்ள சிரைக்கல் என்ற பகுதியில் இறங்குகிறார். அங்கு கிடைக்கும் மிளகை தனது நாட்டுக்கு ஏற்றுமதி செய்கிறார். இதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்காததால், ஒட்டு மொத்த இந்தியாவையும் அபேஸ் பண்ணும் முயற்சியில் இறங்கும் வாஸ்கோடகாமாவுக்கு சிறைக்கல் மன்னர் எதிர்ப்பு தெரிவிக்கிறார். ஆனால், மன்னனின் அமைச்சர் மன்னருக்கு சதி செய்கிறார். இந்த நிலையில் தான் பிரித்விராஜும், பிரபுதேவாவும் வருகிறார்கள். இவர்களுடைய வீரத்தைப் பார்த்த மன்னர் இருவரையும் தனது நாட்டுக்கு தளபதிகளாக்கி, போர்ச்சுகீசியர்களை எதிர்க்க படைகளை திரட்டுமாறும் உத்தரவிடுகிறார்.
வாஸ்கோடகாமாவின் படைகளை எதிர்க்க படைகளை ஒன்று திரட்டும் பணியில் பிரித்விராஜும், பிரபுதேவாவும் ஈடுபட்டிருக்கும் சமயத்தில் மன்னரை அவருடைய மகனும், அமைச்சரும் சதி செய்து கொலை செய்துவிடுகிறார்கள். பிறகு வாஸ்கோடகாமா சிறைக்கல் நாட்டின் மீது படையெடுக்கிறார். இந்த போராட்டத்தில் வீழ்ந்தது வாஸ்கோடகாமாவா அல்லது பிரித்விராஜும், பிரபுதேவாவுமா என்பது வரலாறு படித்த அனைவருக்கும் தெரியும். படத்தின் க்ளைமாக்ஸும் அதுதான்.

இது போன்ற வரலாற்று படங்கள் என்றாலே அதிகப்படியான உழைப்பு தேவைப்படும். அதை மிகச் சரியாகவே இயக்குநர் சந்தோஷ் சிவன் கொடுத்திருக்கிறார். நடிகர்களிடம் வேலை வாங்கிய விதம், கதை களம் என்று ஒவ்வொரு விஷயத்திலும் அப்ளாஸ் வாங்குகிறார்.
படத்தின் ஹீரோ என்றால் அது பிரித்விராஜ் தான். கதாபாத்திரத்திற்கு ஏற்ற அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் பிரித்விராஜ், உடல் மொழி, கம்பீரம், வசனம் உச்சரிப்பு என்று ஒவ்வொன்றிலும் ஸ்கோர் பன்னியிருக்கிறார்.

ஜெனிலியாவை இதுவரை சுட்டிப் பெண்ணாகத்தான் பர்த்திருக்கிறோம். இந்த படத்தில் கத்தியை வைத்துகொண்டு பறந்து பறந்து பைட் பண்ணுகிறார். டூப் ஏதும் போடாமல் ஜெனிலியா போடும் சண்டைகாட்சிகள் பிரமாதம்.
பிரித்விராஜின் நண்பராக வரும் பிரபுதேவா, படத்தில் காமெடி இல்லாத குறையை சில இடங்களில் தீர்த்திருக்கிறார். தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.
அமைச்சராக நடித்திருக்கும் மலையாள நடிகரின் முக பாவனைகள், அவர் பார்க்கும் திருட்டு முழி என அனைத்து அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறது.
வித்யாபாலன், தபு, நித்யா மேனன் என அனைத்து கதாபாத்திர படைப்புகளும் அருமை. அவர்களும் தங்களது வேலையை மிகச் சரியாக செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளாரான சந்தோஷ் சிவன், தனது ஒளிப்பதிவின் மூலம் நம்மை மிரட்டினாலும், படத்தில் என்னவோ இயக்குநர் ஆளுமைதான் இருக்கிறது. கதாபாத்திரங்களுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கும் உடைகளுக்காகவே இயக்குநரை பாராட்டியாக வேண்டும்.வாஸ்கோடகாமாவாகவும், அவரது மகனாகவும் நடித்த நடிகர்களிடம் இயக்குநர் மிகச் சரியான வேலையை வாங்கியிருக்கிறார். இதுவரை வாஸ்கோடகாமாவைப் பற்றி படித்து வந்த நமக்கு அவரை நேரில் பார்த்த அனுபவம் கிடைத்தது.

அதேபோல கலை இயக்குநர், சண்டைப் பயிற்சியாளர், இசையமைப்பாளர் என ஒவ்வொருவரும் தங்களது பணியை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
இதுவரை உருமி என்பது ஒரு இசைக் கருவி என்று தான் நாம் நினைத்திருந்தோம். ஆனால், அது ஒரு வகையான ஆயுதம் என்பதை காட்டியிருக்கிறார் இயக்குநர். அந்த ஆயுதம் தயாரான முறையும், அதை வைத்துகொண்டு பிரித்விராஜ் சண்டைப் போடும் காட்சிகளும் நம்மை வெகுவாக கவர்கிறது.

ஒட்டு மொத்தமாக ‘உருமி’ பார்க்க வேண்டிய படம் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.