Chennai Video
Latest Buzz...
Flash News
47th International Film Festival of India
The 47th International Film Festival of India will begin...
Apple CEO Mr Tim called on Mr Modi today
The CEO of Apple Inc., Mr. Tim Cook, called...
Bank employees to go on strike on July 29
Bank employees across the country will go on a...
Cyclone moves towards Bangladesh
Cyclonic winds bypassed the Indian coast and moved towards...
Summer Special Trains
Southern Railway will operate the following Suvidha special trains...
  • Apr 25, 2012
  • Chennai VIdeo Administrator
  • Cinema

April 25th, 2012
ஊ ல ல லா – விமர்சனம்

இயக்குநராக இருந்த ஜோதி கிருஷ்ணா இப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகியிருக்கிறார். இயக்குநர் என்ற ஒரு குதிரையில் சவாரி செய்தே தன்னை சரியாக நிரூபிக்காத ஜோதி கிருஷ்ணா, இப்போது இயக்குநர் மற்றும் ஹீரோ என்று இரட்டை குதிரை சவாரி செய்து இந்த ‘ஊ ல ல லா’ படத்தின் மூலம் தன்னை ஓரளவு நிரூபித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

சுமரானா ஃபிகராக இருந்தாலும், அதை சூப்பரான ஃபிகர் என்ற அளவுக்கு பில்டப்புடன் அவளை விரட்டும் ஜோதி கிருஷ்ணாவுக்கு, பெண்களிடம் இருந்து கிடைப்பது அடியும், திட்டும் தான். என்னதான் அசிங்கப்பட்டாலும், எப்படியாவது ஒரு ஃபிகரை வளைத்து தன் பைக்கில் வைத்து சுற்றியே தீருவேன் என்று சபதம் எடுக்கும் ஜோடி கிருஷ்ணாவுக்கு உண்மையாகவே சூப்பரான காதலி ஒருவர் கிடைக்கிறார். அவர் தான் நாயகி திவ்யா பண்டாரி.

ஏகப்பட்ட கண்டிஷன்களோடு ஜோதி கிருஷ்ணாவுடன் கேர்ள் பிரண்டாகும் திவ்யா பண்டாரியை வைத்துகொண்டே, தன்னை நோஸ் கட் செய்த ஃபிகர்களை வெறுப்பேற்றுகிறார் ஜோதி கிருஷ்ணா. ஒரு கட்டத்தில் ஜோதி கிருஷ்ணாவின் வெகுளித்தனத்தைப் பார்த்து அவர் மீது திவ்யா பண்டாரி காதல் வயப்பட, ஜோதி கிருஷ்ணாவோ திவ்யா பண்டாரியை விட்டுவிட்டு முழு நேரமும் பல பெண்களுடன் சுற்றுவதையே வேலையாக கொள்கிறார். இதற்கிடையில் ஜோடி கிருஷ்ணாவை திவ்யா பண்டாரி முத்தமிடம் காட்சி ஒன்று ஜோதி கிருஷ்ணாவின் சொல்போனில் இருந்து கசிந்து இணையதளத்தின் மூலம் பரவுகிறது. இதனால் வெளியே தலைகாட்ட முடியாத அளவுக்கு திவ்யா பண்டாரியின் வாழ்க்கையே சீர்குலைகிறது. இதை எதையும் அறியாமல் இருக்கும் ஜோதி கிருஷ்ணா, ஒரு கட்டத்தில் தன் தவறை உணரும் சந்தர்ப்பம் ஏற்படுகிறது. பிறகு அவர் என்ன செய்தார் என்பது தான் முடிவு.

இன்றைய கால கட்டத்தில் காதல் என்பது என்ன என்பதை ரொம்பவும் தெளிவாக சொல்லியிருக்கிறார் ஜோதி கிருஷ்ணா. பெண்களுடன் சுற்றுவதையே தனது லட்சியமாக கொண்ட கதாபாத்திரமாக இருந்தாலும், அதை காட்சிகளில் அதிகமாக காட்டாமல் குடும்பம், செண்டிமென்ட், காமெடி என்று குடும்பத்தோடு பார்க்ககூடிய படமாக இயக்கியதற்காகவே ஜோதி கிருஷ்ணாவை பல முறை பாராட்டலாம்.