Chennai Video
Latest Buzz...
Flash News
47th International Film Festival of India
The 47th International Film Festival of India will begin...
Apple CEO Mr Tim called on Mr Modi today
The CEO of Apple Inc., Mr. Tim Cook, called...
Bank employees to go on strike on July 29
Bank employees across the country will go on a...
Cyclone moves towards Bangladesh
Cyclonic winds bypassed the Indian coast and moved towards...
Summer Special Trains
Southern Railway will operate the following Suvidha special trains...
  • Jun 9, 2012
  • Chennai VIdeo Administrator
  • Cinema

June 9th, 2012
கடல் நாயகியாக நடிகை ராதாவின் இளைய மகள்

ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவே ஆச்சரியப்படும் தற்போதைய செய்தி மணிரத்னம் இயக்கிகொண்டிருக்கும் ‘கடல்’ படத்திலிருந்து நடிகை சமந்தா விலகியதுதான். மணிரத்னம் படத்தில் ஒரு காட்சியில் நடிக்க வேண்டும் என்றால் கூட அதற்கு பெரிய பெரிய நடிகர் சம்மதம் தெரிவிப்பார்கள். அப்படி இருக்க வளர்ந்து வரும் சமந்தாவுக்கு என்ன ஆனது இப்படி ஒரு முடிவு எடுக்க. என்று கோடம்பாக்கமே ஆராய்ந்து கொண்டிருக்கிறது.

இதில் நடிகர் கார்த்திக்கின் மகன் கெளதம் ஹீரோவாக நடிக்கிறார். தென் தமிழகத்தில் கடற்கரையோர கிராமங்களில் தீவிரமாக படப்பிடிப்பு நடத்தப்பட்டு வரும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்தி வந்தாலும், இப்படத்தின் மீது மிகுந்த கவனத்துடன் மணிரத்னம் இருக்கிறார். காரணம், அவருடைய முந்தைய படங்கள் சரியாக போகதாதால் இப்படத்தை எப்படியும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற செய்ய வேண்டும் என்பது அவருடைய விருப்பம்.

சமந்தா, இந்த படத்தின் ஹீரோயின் என்று அறிவிக்கப்பட்டதும், இவ்வளவு குறுகிய காலத்தில் இப்படி ஒரு வாய்ப்பை பெற்றிருக்கிறாரே என்று ஒட்டு மொத்த திரையுலகமே சமந்தா, மீது ஆச்சரியப்பட்டது. ஆனால், இப்போது சமந்தா இப்போது திடீரென்று கடல் படத்திலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்திருப்பதும் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

இப்போது சமந்தாவுக்கு பதிலாக ‘கடல்’ படத்தின் நாயகியாக நடிகை ராதாவின் இளைய மகள் துளசியை மணிரத்னம் அறிமுகம் செய்கிறார்.30 ஆண்டுகளுக்கு முன் கார்த்திக்கும் ராதாவும் ஜோடியாக பாரதிராஜாவின் ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் அறிமுகமானார்கள். இப்போது கார்த்திக்கின் மகனும் ராதாவின் மகளும் ஜோடியாக மணிரத்னம் படத்தில் அறிமுகமாவது குறிப்பிடத்தக்கது.