Chennai Video
Latest Buzz...
Flash News
47th International Film Festival of India
The 47th International Film Festival of India will begin...
Apple CEO Mr Tim called on Mr Modi today
The CEO of Apple Inc., Mr. Tim Cook, called...
Bank employees to go on strike on July 29
Bank employees across the country will go on a...
Cyclone moves towards Bangladesh
Cyclonic winds bypassed the Indian coast and moved towards...
Summer Special Trains
Southern Railway will operate the following Suvidha special trains...
  • Apr 12, 2012
  • Chennai VIdeo Administrator
  • Cinema

April 12th, 2012
கருணாஸ் ஹீரோவாக நடிக்கும் ‘சந்தமாமா’

நகைச்சுவை நடிகராக சினிமாவில் அறிமுகமாகி, குணச்சித்திர நடிகர், கதையின் நாயகன் என கதைக்கு ஏற்றவாறு தன்னை மாற்றி கொண்டு வெற்றி உலா வரும் கருணாஸ், ‘சந்தமாமா’ என்ற படத்திலும் ஹீரோவாக நடிக்கிறார்.

தற்போது ‘ரகளபுரம்’ என்ற படத்தை தயாரித்து ஹீரோவாக நடித்து வரும் கருணாஸ், அப்படத்தை தொடர்ந்து
‘சந்தமாமா’ படத்திலும் ஹீரோவாகியிருக்கிறார்.

சந்தான கிருஷ்ணன் என்கிற சாதரண ஒருவன் தனது எழுத்தாற்றலையும், கற்பனை திறனையும் வைத்துகொண்டு பெரிய எழுத்தாளனாக வேண்டும் என்ற ஆவலில் ‘சந்தமாமா’ வாக ஆகிறான். அதில் அவன் பெற்ற அனுபவங்கள் தான் கதை.

முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தில், குடும்ப சென்டிமென்ட்டையும் கலந்து கலகலப்பான படமாக எடுத்து வருகிறார்கள்.

இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார் ராதா கிருஷ்ணன். இவர்
வினயன், வி.சி. வடிவுடையான் போன்ற இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். மலையாள
இயக்குநர் பாசில் இயக்கிய பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றி, பல விருதுகளையும் வாங்கியிருக்கும் ஆனந்த குட்டன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்க, படத்தின் அனைத்து பாடல்களையும் வைரமுத்து எழுதுகிறார்.

இதில் கருனாஸுக்கு ஜோடியா ஸ்வேதா பாசு நடிக்கிறார், இவர்களுடன் இளவரசு, எம்.எஸ்.பாஸ்கர்,
மோகன்ராம், மாறன், மயில்சாமி, கொட்டாச்சி, பருத்திவீரன் சுஜாதா ஆகியோரும் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடைபெற்று முடிவடைந்தது. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்தி வருகிறார்கள்.