தமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகர்களின் சம்பளம் 10 கோடிக்கும் மேலாக இருக்கும் என்பது கோடம்பாக்க குழந்தைகளும் அறிந்த விஷயம் தான் என்றாலும், இந்த சம்பளத்தை குறுகிய காலத்தில் பெற்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறார் நடிகர் கார்த்தி.
ஆம், நடிகர் கார்த்தியின் சம்பளம் ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. ரூ.14 கோடி சம்பளம் தருவதாக தயாரிப்பாளர் ஒருவர் நடிகர் கார்த்தியிடம் பேசியிருக்கிறாராம். பரூத்தி வீரன், ஆயிரத்தில் ஒருவன், நான் மகான் அல்ல, பையா, சிறுத்தை, சகுனி ஆகிய 6 படங்களிள் மட்டுமே நடித்திருக்கும் கார்த்தியின் இந்த அபார வளர்ச்சியை கண்டு அனைவரும் அதிர்ந்து போயிருக்கிறார்களாம். விஜய், அஜீத், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பல ஆண்டுகள் முட்டி மோதிய பிறகே இந்த பெரிய தொகையை சம்பளமாக பெற்றிருக்க, கார்த்தியின் இந்த குறுகியகால சம்பள உயர்வைப் பற்றிதான் தற்போது கோடம்பாக்கத்தில் பேசி வருகிறார்கள்.
‘அலெக்ஸ் பாண்டியன்’ படத்தில் நடித்து வரும் கார்த்தி பிறகு வெங்கட் பிரபு இயக்கும் ‘பிரியாணி’ படத்தில் நடிக்க இருக்கிறார். பிறகுதான் இந்த 14 கோடி சம்பளம் கொடுக்கும் படத்திற்கு கால்ஷீட் தருவார் போலிருக்கிறது. இதற்கு கால்ஷீட் கொடுக்க கார்த்தி சிறிது யோசித்தாலும் மேலும் 1 கோடியை சேர்த்து மொத்தம் ரூ.15 கோடி சம்பளம் கொடுக்கவும் அந்த தயாரிப்பாளர் தயாராக இருப்பதாக கூறுகிறார்கள்.
இப்படி தயாரிப்பாளர்களே வலியப்போய் சம்பளத்தை ஏற்றி விட்டு விட்டு, பிறகு சங்க கூட்டத்தில் நடிகர்களின் சம்பளத்தினால் தான் பட்ஜெட் எகுறுகிறது என்றால் எப்படி சார்!