Chennai Video
Latest Buzz...
Flash News
47th International Film Festival of India
The 47th International Film Festival of India will begin...
Apple CEO Mr Tim called on Mr Modi today
The CEO of Apple Inc., Mr. Tim Cook, called...
Bank employees to go on strike on July 29
Bank employees across the country will go on a...
Cyclone moves towards Bangladesh
Cyclonic winds bypassed the Indian coast and moved towards...
Summer Special Trains
Southern Railway will operate the following Suvidha special trains...
  • Jun 8, 2012
  • Chennai VIdeo Administrator
  • Cinema

June 8th, 2012
கிருஷ்ணவேணி பஞ்சாலை -விமர்சனம்

பல ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் ஒவ்வொரு தொழிற்சாலைகளுக்கும் ஒரு சுவாரஸ்யமான மற்றும் சோகமான கதை உண்டு என்பதை உணர்த்தியிருக்கும் படம் ‘கிருஷ்ணவேணி பஞ்சாலை’.

1950களில் கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் அமோகமாக இயங்கி வந்த காட்டன் தொழிற்சாலைகளும், அந்த தொழிலும் காலப்போக்கில் எப்படி மறைந்துப் போனது என்பதை மையக் கருவாக வைத்து, அந்த தொழிற்சாலைகளில் பணிபுரியும் மக்களின் காதல், கோபம், சோகம் போன்றவற்றை சேர்த்து திரைக்கதை அமைத்து இயக்குநர் சொல்லியிருக்கிறார்.

காட்டன் தொழிற்சாலையை வெற்றிகரமாக நடத்துவதையே தனது லட்சியமாக கொண்ட கிருஷ்ணவேணி பஞ்சாலை முதலாளி சூழ்நிலை காரணமாக தற்கொலை செய்துகொள்கிறார். லண்டனில் படித்துகொண்டிருக்கும் தனது மகன் தனக்கு பிறகு இந்த தொழிற்சாலையை நிர்வகிக்க வேண்டும் என்ற அவருடைய ஆசையை எற்று அவருடைய மகனான ராஜிவ் கிருஷ்ணா, தொழிற்சாலையை திறம்பட நிர்வகிக்கிறார்.

தொழிலாளர்களுக்கு வீடு கட்டி கொடுப்பது, மகளிருக்கு கல்லூரி கட்டுவது, தொழிலாளர்கள் கேட்கும் தொகையை காட்டிலும் அதிகமான போனஸ் வழங்குவது என ஒரு சிறந்த முதலாளியாக ராஜிவ் கிருஷ்ணா விளங்குகிறார். லாபகரமாக இயங்கிகொண்டிருக்கும் தொழிற்சாலை காலப்போக்கில் நஷ்ட்டத்தில் இயங்க, அந்த நேரத்தில் போனஸ் தொகையை அதிகமாக எதிர்ப்பார்க்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள்.

அதே சமயத்தில் தொழிற்சாலையில் பணிபுரியும் ஹேமசந்திரனுக்கும், நந்தனாவுக்கும் இடையே காதல் ஏற்படுகிறது. ஏழையாக இருந்தாலும் குடும்ப கெளரவுமும், ஜாதியும் முக்கியம் என்று கருதும் நந்தனாவின் அம்மாவான ரேணுகா, தனது மூத்த மகள் வேறு ஒரு ஜாதியை சேர்ந்தவரை திருமணம் செய்துகொண்டார் என்பதற்காக அவருக்கு சோற்றில் விஷம் வைத்து கொலை செய்துவிடுகிறார். இந்த உண்மையை அறிந்த நந்தனா என்ன செய்தார்? அவர் ஹேமசந்திரனுடன் சேர்ந்தாரா இல்லையா? வேலை நிறுத்தத்தால் யார் யார் எந்த எந்த வகையில் பாதிக்கப்படுகிறார்கள். இறுதியில் தொழிற்சாலை திறக்கப்பட்டதா இல்லையா? என்பது தான் க்ளைமாக்ஸ்.

தொழிற்சாலையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டிருப்பதால், முழுக்க முழுக்க தொழிற்சாலை சம்மந்தமான காட்சிகளே அதிகமாக இடபெறுகிறது. தொழிற்சங்கங்கள் தொழிலாளிகளின் நலனுக்காக அமைக்கப்பட்டவை என்றாலும், அவையே சில சமயங்களில் தொழிலாளிகளின் வயிற்றிலும் அடிக்க செய்கிறது என்பதை மிக அழுத்தமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் தனபால் பத்மநாபன்.

1950களுக்குப் பிறகு நடக்கும் கதை என்பதால், அந்த காலகட்டத்தில் இருந்த ஜாதி வெறியையும் இப்படத்தில் சுட்டி காட்டப்பட்டுள்ளது. பெற்ற மகளையே ஒரு தாய் விஷம் வைத்து கொள்ளும் காட்சி ஜாதி வெரியின் உச்சகட்டத்தை சொல்லியிருக்கிறது.

நாயகனாக நடித்திருக்கும் ஹேமசந்திரன், இதற்கு முன்பு சில படங்களில் நடித்திருந்தாலும், இப்படத்தில் அவர் புது நடிகராக காட்சியளிக்கிறார். அவருடைய முந்தைய படங்களில் பாதிப்பு எந்த காட்சிகளிலும் இல்லாதது அவர் கதாபாத்திரத்தை உள்வாங்கி கொண்டதை காட்டுகிறது.

நாயகியாக நடித்த நந்தனா, எப்போதுமே சிரித்த முகத்தோடு வரும் இவர் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.

தொழிற்சாலையின் முதலாளியாக நடித்திருக்கும் ராஜிவ் கிருஷ்ணா, எந்த அலட்டலும் இல்லாமல் சாதாரணமாக நடித்து ஸ்கோர் செய்திருக்கிறார்.

மற்ற கதாபாத்திரங்களான் எம்.எஸ்.பாஸ்கர், அஜயன் பாலா, பாலா சிங், சண்முகராஜா, ரேணுகா என அனைவருமே தங்களது பணியை திறம்பட செய்திருக்கிறார்கள்.

என்.ஆர்.ரகுநந்தன் இசையில் பாடல்கள் அனைத்தும் இனிமை. வைரமுத்துவின் வரிகளில் உருவான ‘ஆலைகாரி…’ என்ற பாடல் அனைத்து தொழிற்சாலைகளிலும் ஆயுதப் பூஜையன்று ஒலிக்கும் பாடலாக இருக்கும். தாமரை எழுதிய ‘உன் கண்கள் கண்ணாடி…’ பாடல் திரும்ப திரும்ப கேட்கும் ரகம்.

சுரேஷ் பார்கவ் மற்றும் அதிசயராஜ் ஆகியோரது ஒளிப்பதிவு 60ஆம் ஆண்டுகளை ரொம்பவே அழகாக காண்பித்திருக்கிறது.

பொதுவாக இதுபோன்ற படங்கள் என்றாலே முதலாளிகளை தான் வில்லனாக காட்டுவார்கள். ஆனால், இப்படத்தை பொறுத்தவரையில் தங்களுக்கே தெரியாமல் தொழிலாளர்கள் தங்களுக்கு தாங்களே எப்படி வில்லனாக மாறுகிறார்கள் என்பதை ரொம்பவே எதார்த்தமாக சொல்லப்பட்டிருக்கிறது.