Chennai Video
Latest Buzz...
Flash News
47th International Film Festival of India
The 47th International Film Festival of India will begin...
Apple CEO Mr Tim called on Mr Modi today
The CEO of Apple Inc., Mr. Tim Cook, called...
Bank employees to go on strike on July 29
Bank employees across the country will go on a...
Cyclone moves towards Bangladesh
Cyclonic winds bypassed the Indian coast and moved towards...
Summer Special Trains
Southern Railway will operate the following Suvidha special trains...
  • Jun 1, 2012
  • Chennai VIdeo Administrator
  • Cinema

June 1st, 2012
கிருஷ்ணவேணி பஞ்சாலை

கிருஷ்ணவேணி பஞ்சாலை திரைப்படத்திற்கு  ‘யு’ சான்றிதழை வழங்கியிருக்கிறது தணிக்கைக்குழு.

அதேபோல சிறந்த தமிழ் உணர்வை வெளிப்படுத்தும் கலாசார ரசனை மிக்க படங்களுக்கு தமிழக அரசு வழங்கும் வரி விலக்கையும் இந்தப்படம் பெற்றிருக்கிறது. வரி விலக்கிற்காக படம் பார்த்த அரசு அதிகாரிகள் படத்தின் முடிவில் நெகிழ்ச்சியோடு படக்குழுவினரைப் பாராட்டியதோடு இந்தப் படத்தின் தாக்கம் தங்களுக்கு இரண்டு நாட்களுக்காவது இருக்கும் என்று கூறியுள்ளனர். அதிகாரிகள் மட்டத்தில் கிடைத்திருக்கும் இந்த கமெண்ட் ‘கிருஷ்ணவேணி பஞ்சாலை’ படம் குறித்து சினிமா வட்டாரத்தில் பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கிறது.

கிருஷ்ணவேணி பஞ்சாலை திரைப்படத்தில் வைரமுத்து எழுதிய ஆலைக்காரி.. பஞ்சாலைக்காரி..பாடலும் தாமரை எழுதிய ‘உன் கண்கள் கண்ணாடி..’ பாடலும் தமிழகத்தின் தலைநகரம் முதல் கடைக்கோடி கிராமம் வரை ஒலிக்கின்றன. எஃப்.எம்.களில் நேயர்களின் விருப்பமான பாடல்களாக இந்த இரண்டு பாடல்களும் இருக்கின்றன. இன்னொரு பாடலான ‘ஆத்தாடி ஒரு பறவ பறக்குதா..’ தமிழகத்தில் ரசிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் கடல்தாண்டி இலங்கையில் டாப் 10 பட்டியலில் ஏற்கனவே வந்துவிட்டது. சிங்கப்பூர், மலேசியா நாடுகளிலும் எஃப்.எம். சேனல்களில் நேயர்கள் விரும்பிக் கேட்கும் பட்டியலில் முன்னணியில் உள்ளது ‘கிருஷ்ணவேணி பஞ்சாலை’ பாடல்கள்.

இந்தப் படத்தின் பாடல்கள் வெறுமே வார்த்தை ஜாலங்களாக இல்லாமல் கதையின் போக்கை உணர்த்தும் விதத்தில் இருப்பதே இதன் தனித்தன்மைக்கு காரணம் என்று பாடல்களைக் கேட்டவர்கள் சொல்லும் அளவுக்கு வரிகள் புரியும் வகையில் இசையமைத்திருக்கிறார் இசையமைப்பாளர் என்.ஆர்.ரகுநந்தன்.