Chennai Video
Latest Buzz...
Flash News
47th International Film Festival of India
The 47th International Film Festival of India will begin...
Apple CEO Mr Tim called on Mr Modi today
The CEO of Apple Inc., Mr. Tim Cook, called...
Bank employees to go on strike on July 29
Bank employees across the country will go on a...
Cyclone moves towards Bangladesh
Cyclonic winds bypassed the Indian coast and moved towards...
Summer Special Trains
Southern Railway will operate the following Suvidha special trains...
  • May 30, 2012
  • Chennai VIdeo Administrator
  • Cinema

May 30th, 2012
தமிழ்,தெலுங்கில் உருவாகிறது கஹானி

இந்தியில் பெரும் வெற்றி பெற்ற கஹானி திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாக உள்ளது.இந்தியில் தொலைக்காட்சி தொடர்கள் தயாரிப்பில் புகழ் பெற்று விளங்கும் என்டிமால் இன்டியா பிரைவேட் லிட் நிறுவனம் நேமிசந்த ஜபக் புரெடக் ஷன்ஸ் நிறுவன‌த்தோடு இணைந்து இந்த படத்தை தயாரிக்க உள்ளது.

இந்தி தொலைக்காட்சி தொடர்களை தயாரிப்பதில் முன்னோடி நிறுவனமான என்டிமால் முதல் முறையாக திரைப்பட தயாரிப்பில் ஈடுபட தீர்மானித்து வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மகத்தான வெற்றி பெற்ற இந்தி படமான கஹானியை ரீமேக் செய்யும் உரிமையை பெற்றுள்ளது.பலத்த போட்டிக்கு நடுவே இந்த‌ உரிமையை நிறுவனம் பெற்றுள்ளது.
சுஜாய் கோஷ் எழுதி இயக்கிய கஹானியில் வித்யா பாலன் நாயகியாக நடித்துள்ளார்.பரம்பத்ரா சாட்டர்ஜி மற்றும் நஸ்ருதின் சித்திக் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.கொல்கத்தாவில் துர்கா பூஜையின் போது காணாமல் போன தனது கனவரை தேடும் வித்யா பாக்சி என்னும் பெண்ணாக நடித்துள்ளார்.இந்த தேடலில் சத்யகி ராணா சின்ஹா(சாட்டர்ஜி)மற்றும் கான்(சித்திக்) உதவி செய்கின்றனர்.அனைத்து தரப்பினராலும் பாராட்டப்பட்ட இந்த ப‌டம் ரூ 100 கோடிக்கு மேல் வசூலை ஈட்டியது.

இந்த படத்தின் ரீமேக் உரிமை என்டிமால் வசம் இருக்கும். முதலீட்டு பங்குதாரராக நேமிசந்த் ஜபக் புரெடக் ஷன்சின் ஹித்தேஷ் ஜபக் இருப்பார்.
இந்த படத்தை இயக்குவதற்காக மூன்று முன்ணணி இயக்குனர்களோடு பேச்சு நடத்தப்பட்டு வருகிறது.இரண்டு முன்னணி நாயகிகளிடம் பேச்சு நடத்தப்பட்டுள்ளது.விரைவில் அறிவிப்பு வெளியாகும்.

நேமிசந்த் ஜபக் தமிழில் நான் அவன் இல்லை,மிஷ்கினின் அஞ்சாதே,பாண்டி,தனுஷின் மாப்பிள்ளை உள்ளிட்ட படங்கள் தயாரித்துள்ளது.