Chennai Video
Latest Buzz...
Flash News
47th International Film Festival of India
The 47th International Film Festival of India will begin...
Apple CEO Mr Tim called on Mr Modi today
The CEO of Apple Inc., Mr. Tim Cook, called...
Bank employees to go on strike on July 29
Bank employees across the country will go on a...
Cyclone moves towards Bangladesh
Cyclonic winds bypassed the Indian coast and moved towards...
Summer Special Trains
Southern Railway will operate the following Suvidha special trains...
  • May 19, 2012
  • Chennai VIdeo Administrator
  • Cinema

May 19th, 2012
நடிகர் சங்க தேர்தல் – சரத்குமார் மீண்டும் போட்டி

தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கு நடிகர் சரத்குமார் மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளை சேர்ந்த நடிகர்-நடிகைகள் உறுப்பினர்களாக இருக்கும் தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தில், நாடக நடிகர்களையும் சேர்த்து மொத்தம் 3 ஆயிரம் உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.

இந்த சங்கத்திற்கு எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், அஞ்சலிதேவி, ராதாரவி, விஜயகாந்த், சரத்குமார் ஆகியோர் தலைவராக பதவி வகித்துள்ளார்கள்.

மூன்று வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும் நடிகர் சங்கத்தின் 2012-2015ஆம் ஆண்டிற்கான தேர்தல், வரும் ஜூன் 10ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 23ஆம் தேதி தொடங்குகிறது. 25ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் முடிவடையும். 30ஆம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

கடந்த இரண்டு முறையாக தலைவராக இருந்து வரும் நடிகர் சரத்குமார், மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். அவர் அணியில் இப்போது துணைத் தலைவராக இருந்து வரும் விஜயகுமார், பொதுச்செயலாளராக இருந்து வரும் ராதாரவி, பொருளாளராக இருந்து வரும் வாகை சந்திரசேகர் ஆகியோரும் மீண்டும் போட்டியிடுகிறார்கள்.