Chennai Video
Latest Buzz...
Flash News
47th International Film Festival of India
The 47th International Film Festival of India will begin...
Apple CEO Mr Tim called on Mr Modi today
The CEO of Apple Inc., Mr. Tim Cook, called...
Bank employees to go on strike on July 29
Bank employees across the country will go on a...
Cyclone moves towards Bangladesh
Cyclonic winds bypassed the Indian coast and moved towards...
Summer Special Trains
Southern Railway will operate the following Suvidha special trains...
  • Jun 27, 2012
  • Chennai VIdeo Administrator
  • Cinema

June 27th, 2012
நடிகை சோனா படத்தை ஆங்கிலத்தில் எடுக்க முடிவு

கவர்ச்சி நடிகை சோனா, தனது வாழ்க்கையை புத்தகமாக எழுதவும், திரைப்படமாக எடுக்கவும் திட்டமிட்டிருக்கிறார். சோனா, தற்போது இப்படத்திற்கான நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வில் பரபரப்பாக இயங்கி வருகிறார்.

இதற்கிடையில் என் சொந்த வாழ்க்கையை படமாக எடுப்பேன் என்று கூறியதும் எனக்கு கொலை மிரட்டல்கள் வந்தது என்று கூறிய சோனா, தற்போது தனது வாழ்க்கைப் படத்தில் என் வாழ்க்கையில் நடந்த இருட்டறை ரகசியங்களையும் சொல்வேன். என்று கூறியிருக்கிறார்.

இதுகுறித்து கூறிய சோனா, “என்னை ரசிகர்கள் கவர்ச்சி நடிகையாகவும், குத்தாட்டம் ஆடுபவராகவும் தான் பார்க்கிறார்கள். உண்மையில் நான் யார்? என் கேரக்டர் என்ன என்று அவர்களுக்குத் தெரியாது. அதை இப்படத்தின் மூலம் தெரிய வைக்கப் போகிறேன்.

என் படம் ‘தி டர்ட்டி பிக்சர்’ போல் ஒருபோதும் இருக்காது. அந்தப் படம் கோழைத்தனத்தை பிரதிபலித்தது. அதன் நாயகி தற்கொலை செய்து கொள்வார். ஆனால் நான் அப்படி இல்லை துணிச்சலான பெண். எனது திரையுலக அனுபவங்கள், நான் சந்தித்த நபர்கள், என்னை தவறாக பயன்படுத்த முயன்றவர்கள் பற்றியெல்லாம் படத்தில் சொல்வேன். சில இருட்டு ரகசியங்களும் படத்தில் இருக்கும்.

என்னைப் பற்றி பலரும் பலவிதமாக பேசுகிறார்கள். உண்மையில் நான் யார்? என்பதை இப்படம் வெளிப்படுத்தும். இந்தப் படத்தை பார்ப்பவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படும் வகையில் கதை இருக்கும். வயது வந்தவர்கள் மட்டும் பார்க்கக்கூடிய காட்சிகள் படத்தில் இடம்பெறும் என்பதால் இங்குள்ள தணிக்கை குழுவிடம் போராட வேண்டியிருக்கும். அதனால் என் படத்தை ஆங்கிலத்தில் எடுக்க முடிவு செய்திருக்கிறேன். படத்தில் நடிக்கும் நடிகர், நடிகை பற்றிய விவரங்களை விரைவில் வெளியிடுவேன்.” என்றார்.