Chennai Video
Latest Buzz...
Flash News
47th International Film Festival of India
The 47th International Film Festival of India will begin...
Apple CEO Mr Tim called on Mr Modi today
The CEO of Apple Inc., Mr. Tim Cook, called...
Bank employees to go on strike on July 29
Bank employees across the country will go on a...
Cyclone moves towards Bangladesh
Cyclonic winds bypassed the Indian coast and moved towards...
Summer Special Trains
Southern Railway will operate the following Suvidha special trains...
  • Jun 29, 2012
  • Chennai VIdeo Administrator
  • Cinema

June 29th, 2012
நாடோடிகள்’ படத்தை இந்தியில் இயக்கும் பிரியதர்ஷன்

சமுத்திரக்கனி இயக்கத்தில் இயக்குநர் சசிகுமார், ஹீரோவாக நடித்து தயாரித்தப் படம் ‘நாடோடிகள்’. 2009ஆம் ஆண்டு வெளியான இப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்யவும் திட்டமிடப்பட்டது.

முதலில் இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்த சமுத்திரக்கனி, அதைத் தொடர்ந்து இந்தியிலும் ரீமேக் செய்யப்போவதாக அறிவித்தார். பிறகு அவர் ‘போராளி’ என்ற படத்தை இயக்கியதால் இந்தி நாடோடிகள் படத்தில் வேலைகள் தள்ளிப்போயின. தற்போது ‘நாடோடிகள்’ படத்தை இந்தியில் எடுக்கும் வேலைகள் மும்முரமாகியிருக்கிறது. ஆனால் இந்தியில் இப்படத்தை இயக்கபோவது சமுத்திரக்கனி அல்ல இயக்குநர் பிரியதர்ஷன். இதற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யப்போகிறார்.

‘சிறைச்சாலை’ படத்தில் இணைந்து பணிபுரிந்த பிரியதர்ஷன், சந்தோஷ் சிவன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த படத்தில் இணைகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.