Chennai Video
Latest Buzz...
Flash News
47th International Film Festival of India
The 47th International Film Festival of India will begin...
Apple CEO Mr Tim called on Mr Modi today
The CEO of Apple Inc., Mr. Tim Cook, called...
Bank employees to go on strike on July 29
Bank employees across the country will go on a...
Cyclone moves towards Bangladesh
Cyclonic winds bypassed the Indian coast and moved towards...
Summer Special Trains
Southern Railway will operate the following Suvidha special trains...
  • Jun 26, 2012
  • Chennai VIdeo Administrator
  • Cinema

June 26th, 2012
படப்பிடிப்பில் ரகளை – கோபமடைந்த அஜீத்

பில்லா 2′ வரும் ஜூலை 13ஆம் தேதி வெளியாவது உறுதியாகி விட்டது. இந்த நிலையில் அஜீத், தனது அடுத்த படத்தின் படப்பிடிப்புக்கு சென்று விட்டார். விஷ்ணுவர்தன் இயக்கும் இப்படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு முதலில் மும்பையில் நடக்க இருந்தது. அங்கு சிதோஷ நிலை சரியில்லாத காரணத்தால், தற்போது பெங்களூரில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பெங்களூரு கருடா மால் அருகே உள்ள ஒரு வீட்டில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அஜீத், நயன்தாரா வந்திருக்கும் தகவல் அறிந்த ரசிகர்கள் படப்பிடிப்பு நடைபெற்ற இடத்தில் திரளாக கூடினர். மேலும் வாகன்ங்கள் மற்றும் சுவர்களில் ஏறியதால் பதற்றம் ஏற்பட்டது. இதனால் அந்த வீட்டின் செக்யூரிட்டிகளுக்கும், ரசிகர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த ரசிகர்கள் அங்கு இருந்த கார்களின் கண்ணாடிகளையும் உடைத்தனர்.

இதனால் மறுநாள் பெங்களூரு வெளிப்பகுதியான ஹெண்ணூருக்கு படப்பிடிப்பு மாற்றப்பட்டது. அங்கேயும் ரசிகர்களின் கூட்டம் திரளாக கூடியது. மேலும் அஜீத்தை பார்க்க வேண்டும் என்பதற்காக இரண்டு இளைஞர்கள் பைக்கில் அஜீத்தின் காரை பின்தொடர்ந்து செல்லும் போது அஜீத்தின் கார் முன்னே விழுந்தார்கள். அஜீத்தின் கார் உடனடியாக நிறுத்தப்பட்டதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

இதனால் கோபமடைந்த அஜீத் லோக்கேஷனை வேறு எங்காயாவது மாற்றிவிட்டு என்னை கூப்பிடுங்கள். என்று கூறிவிட்டு பெங்களூரில் இருந்து சென்னைக்கு திரும்பி விட்டாராம்.