Chennai Video
Latest Buzz...
Flash News
47th International Film Festival of India
The 47th International Film Festival of India will begin...
Apple CEO Mr Tim called on Mr Modi today
The CEO of Apple Inc., Mr. Tim Cook, called...
Bank employees to go on strike on July 29
Bank employees across the country will go on a...
Cyclone moves towards Bangladesh
Cyclonic winds bypassed the Indian coast and moved towards...
Summer Special Trains
Southern Railway will operate the following Suvidha special trains...
  • Apr 25, 2012
  • Chennai VIdeo Administrator
  • Cinema

April 25th, 2012
பொம்மை நாய்கள்

முன்னால் முதலவர் மு.கருணாநிதி கதை, வசனம் எழுதிய ‘கண்ணம்மா’ படத்தை இயக்கிய பாபா விக்ரம்,
‘பொம்மை நாய்கள்’ என்ற படத்தை தனது ‘பாபா சினி பிலிம்ஸ்’ நிறுவனத்தின் மூலம் தயாரித்து இயக்கி
வருகிறார்.

திரில்லர் படமாக உருவாகும் இப்படத்தில் மூன்று பொம்மை நாய்கள் அதிநவீன தொழில்நுட்பத்தால் உயிர் பெற்றுத் தரையில் கால்படாமல் எதிரிகளைப் பறந்து பறந்து தாக்கிக் கொல்லும். இந்த பொம்மை நாய்கள் தான் படத்தின் கதாநாயகர்கள்.

இப்படத்தை பற்றி கூறிய இயக்குநர் பாபா விக்ரம், “வாழ்க்கையில் நாம் சந்திக்கின்ற பல விஷயங்கள் கனவில் வரும். அது போல தான் இந்தப் படத்தைப் பாக்குற ஒவ்வொருத்தர் கனவிலேயும் நிச்சயம் இந்த பொம்மை நாய்கள் வந்து பயமுறுத்தும். இந்த நாய்களுக்கு கடிக்கிற வியாதியில்லை. இது கடிக்கனுங்கிற விதி. யாரை கடிக்கணுமின்னு விதி எழுதப்பட்டிருக்கோ அவங்களை மட்டும்தான் கடிக்கும். இது கடிச்சா காயமாகாது. ஆனா கண்டிப்பா மரணம் வரும் இப்படி எல்லோரட விதியையும் இந்த பொம்மை நாய்களோட தலையில எழுதி வச்ச பிரம்மன் யாரு அவனுக்கு எதுக்காக இந்த கோர புத்தி. இது எல்லாத்துக்கும் விடைதான் இப்படத்தின் கதை.” என்றார்வி.எஸ்.ராகவன் பொம்மை நாய்களுக்கு உயிர் கொடுக்கும் விஞ்ஞானியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் ராதாரவி, நாசர், ஜாக்குவார் தங்கம், வடிவுக்கரசி உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்திருக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குவதோடு படத்தின் இசை, பாடல்கள், தயாரிப்பு ஆகிய துறைகளையும் எஸ்.எஸ்.பாபா சங்கர் கவனித்துகொள்கிறார்.