இயக்குநர் சுந்தர் சி, விஷாலை வைத்து இயக்கும் ‘எம்ஜிஆர்’ (மத கஜ ராஜா) படத்திலிருந்து நடிகை கார்த்திகா விலகுவதாக அறிவித்திருக்கிறார்.
படத்தின் கதையில் இயக்குநர் சிந்தர் சி, செய்த மாறுதல்கள் தனக்கு திருப்தியாக இல்லை என்பதால் இப்படத்தில் இருந்து விலகியிருக்கும் கார்த்திகா இதுகுறித்து கூறுகையில், “என்னிடம் இயக்குநர் சுந்தர் சொன்ன கதை ஒன்றாகவும், இப்போது அவர்கள் எடுக்கவிருப்பது வேறு கதையாகவும் தெரிகிறது. என்னை வெறும் கவர்ச்சிக்காக மட்டும்தான் பயன்படுத்தப் பார்க்கிறார்கள்.
முதலில் என்னிடம் சொன்ன கதையில் விஷால் மூன்று வேடங்களில் நடிப்பார் என்றார்கள். இப்போது அதிலும் மாறுதல், இரண்டு ஹீரோயின்கள் வேறு. எனவே எனக்கு இந்த கதையில் பெரிய முக்கியத்துவம் இருக்காது. இந்தப் படத்தில் நான் விலகினாலும், சுந்தர் சி இயக்கும் வேறு ஒரு படத்தில் கண்டிப்பாக நடிப்பேன் என நம்புகிறேன்.” என்றார்.
தற்போது கார்த்திகா, நடிக்கும் கதாபாத்திரத்தில் நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமிமையை நடிக்க வைக்கப் போவதாக தகவல்கள் கூறுகின்றன.