நடிகை வித்யாபாலுனுக்கு தேசிய விருது, சம்பள உயர்வு பல முன்னேற்றத்தை கொடுத்தப் படம் ‘டர்ட்டி பிக்சர்ஸ்’. மறைந்த கவர்ச்சி நடிகை சில்க்கின் வாழ்க்கையைப் பற்றிய படமான இப்படத்தை இந்தியை மொழியை தொடர்ந்து மேலும் பல இந்திய மொழிகளிலும் ரீமேக் செய்கிறார்கள்.
தமிழ் டர்ட்டி பிக்சர்ஸில் யார்? ஹீரோயினாக நடிக்கப் போகிறார் என்பது பற்றி ஒரு பட்டி மன்றமே நடந்துகொண்டிருக்க, மலையாளத்தில் உருவாகும் டர்ட்டி பிக்சர்ஸ் படத்தில் சில்க்கின் கதாபாத்திரத்தில் நடிக்க சனாகான் ஒப்பந்தமாகியிருக்கிறார்.
‘சிலம்பாட்டம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சனாகான், ‘தம்பிக்கு இந்த ஊரு’, ‘ஆயிரம் விளக்கு’, ‘பயணம்’ ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்தவர் அப்படியே தெலுங்கு சினிமாவுக்கு தாவினார். மும்ப்பை வாசியான இவர் தற்போது அங்கு சில விளம்பரப் படங்களிலும் நடித்து வருகிறார். அதில் ஒரு விளம்பரப் படத்தில் சல்மான் கானுடனும் நடித்திருக்கிறாராம்.
சனாகான் தற்போது ‘டர்ட்டி பிக்சர்ஸ்’ படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமாகிறார். நடிகை சில்க்க்கை மலையாளத்தில் அறிமுகப்படுத்திய ஆண்டனி ஈஸ்ட்மேன் தான் ‘டர்ட்டி பிக்சர்ஸ்’ படத்திற்கு திரைக்கதை எழுதுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அனில் இப்படத்தை இயக்குகிறார்.
இந்திக்கும், மலையாள டர்ட்டி பிக்சர்ஸுக்கும் என்ன வேறுபாடு என்று சனாகானிடம் கேட்டதற்கு, “இந்தி டர்ட்டி பிக்சர்ஷில் படப்பிடிப்புகளில் நடந்த காட்சிகளே பெரும்பாலும் இருக்கும், மலையாள டர்ட்டி பிக்சர்ஸில் சில்க்கின் சிறு வயது நினைவுகளும், ஞாபங்களும் படமாக்கப்பட்டு இருக்கின்றன.” என்றார்.
சில்க் நடித்தப் படங்களை பார்த்திருக்கிறீர்களா? என்றதற்கு, “அவர் நடித்த படத்தை முழுவதுமாக பர்த்ததில்லை. சில படங்களின் சில காட்சிகளையும், சில பாடல் காட்சிகளையும் பார்த்து இருக்கிறேன்.” என்றவரிடம், இந்தியில் வித்யா பாலன் நடித்ததைப் போல நீங்கள் கவர்ச்சியாக நடிப்பீர்களா? என்று கேட்டதற்கு, “இந்தியில் இருந்த அளவுக்கு மலையாளத்தில் கவர்ச்சி இருக்காது. கவர்ச்சியை மையமாக வைத்து மட்டும் இந்த படத்தை எடுக்கவில்லை. அதனால், நான் கவர்ச்சி காட்டாத சில்க்காகவே இதில் நடிக்கிறேன். இந்த படம் சென்சாரில் யூ’ சான்றிதழ் வாங்கும் படமாகவே இயக்குநர் எடுக்க நினைத்தார்.” என்றார்.
டர்ட்டி பிக்சர்ஸ் படத்தைப் பற்றி கூறிய சனாகான், மற்றொரு விஷயத்தையும் தெளிவுப் படுத்தினார். “கடந்த மாதம் பெங்களூரில் சனாகான் என்ற நடிகை பாலியல் தொழில் வழக்கில் சிக்கிக் கொண்டதாக ஊடகங்கள் பரபரப்பாக செய்தியை வெளியிட்டன. சனா கான் என்ற பெயரைப் பார்த்தனும் சில நான் தான் அந்த நடிகை என்று நினைத்து விட்டனர். அப்படி பட்ட பெண் நான் அல்ல. நான் உடனே அந்த விஷயத்தில் தலையிட்டதும் அந்த சனாகானின் புகைப்படத்துடன் கர்னாடக போலீஸ் செய்தி வெளிட்டது. என்னிடம் வருத்தம் தெரிவித்தது.” என்றார்.
சில்க்காக நீங்கள் நடிக்கிறீர்களே, சில்க்குக்கு நிஜ வாழ்க்கையில் காதலர் இருந்தார். உங்களுக்கு அப்படி யாராவது இருக்கிறார்களா? என்று கேட்டதற்கு,
எனக்கு காதாலர் என்று யாரும் கிடையாது. நானும் யாரையும் காதலிக்கவில்லை. திரைப்படங்களில் காதலிப்பதற்கே எனக்கு நேரம் சரியாக இருக்கிறது. நிஜ வாழ்க்கையில் காதலிக்க நேரம் இல்லை.” என்று தனது கொஞ்சும் குரலால் சனாகான் பதிலளித்தார்.