Chennai Video
Latest Buzz...
Flash News
47th International Film Festival of India
The 47th International Film Festival of India will begin...
Apple CEO Mr Tim called on Mr Modi today
The CEO of Apple Inc., Mr. Tim Cook, called...
Bank employees to go on strike on July 29
Bank employees across the country will go on a...
Cyclone moves towards Bangladesh
Cyclonic winds bypassed the Indian coast and moved towards...
Summer Special Trains
Southern Railway will operate the following Suvidha special trains...
  • May 9, 2012
  • Chennai VIdeo Administrator
  • Cinema

May 9th, 2012
முதல்வருக்கு இயக்குநர் லிங்குசாமி கோரிக்கை

கோடம்பாக்கமே கொண்டாடும் படமாக அமைந்திருக்கும் வழக்கு எண் 18/9 படத்தின் தயாரிப்பாளர் இயக்குநர் லிங்குசாமி, படத்திற்குப் போடப்பட்ட முப்பது சதவீத வரியை குறித்து தமிழக முதல்வருக்கு கோரிக்கை ஒன்றை வைத்திருக்கிறார்.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய லிங்குசாமி, “தமிழ், ஆங்கில பத்திரிகைகள், பிற மாநிலங்களில், இணையதளங்களில், ஃபேஸ்புக், ட்விட்டர் என அனைத்து ஊடகங்களிலும் தங்களுடைய படம் போல இப்படத்த்தை கொண்டாடுகிறார்கள். இத்துடன் இல்லாமல் பல விழாக்களில் பல விருதுகளை இப்படம் பெறும் என்றும் கூறுகிறார்கள். இப்படிபட்ட இந்த படம் மக்களிடம் முழுமையாக போய் சேர வேண்டும் என்றால் இதற்கு விதிக்கப்பட்டிருக்கும் 30 சதவீதம் வரி முற்றிலும் நீக்கப்பட வேண்டும்.

யூ சான்றிதல் பெற்ற படத்திற்கு மட்டும் வரி விலக்கு என்று இல்லாமல் இதுபோன்ற தரமான சிறிய படங்களுக்கும் வரி விலக்கு கொடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு இந்த சந்தர்ப்பத்தில் வேண்டுகோளாக இதை நான் கூறுகிறேன். தயவு செய்து இதை ஆலோசிக்க வேண்டும்”. என்று கூறினார்.