Chennai Video
Latest Buzz...
Flash News
47th International Film Festival of India
The 47th International Film Festival of India will begin...
Apple CEO Mr Tim called on Mr Modi today
The CEO of Apple Inc., Mr. Tim Cook, called...
Bank employees to go on strike on July 29
Bank employees across the country will go on a...
Cyclone moves towards Bangladesh
Cyclonic winds bypassed the Indian coast and moved towards...
Summer Special Trains
Southern Railway will operate the following Suvidha special trains...
  • Jun 22, 2012
  • Chennai VIdeo Administrator
  • Cinema

June 22nd, 2012
ஸ்பெக்ட்ரம் மல்டிப்ளக்ஸ் காம்ப்ளக்ஸில் ‘எஸ்2 சினிமாஸ்’

நவீன வசதிகொண்ட திரையரங்குகளின் முன்னோடியாக திகழும் சத்யம் திரையரங்க குழுமத்தின் மூன்றாவது புதிய திரையரங்கமான ‘எஸ்2 சினிமாஸ்’ சென்னை, பெரம்பூரில் நிறுவப்பட்டுள்ள ஸ்பெக்ட்ரம் மல்டிப்பிளக்ஸ் காம்ப்ளக்ஸில் நிறுவப்பட்டுள்ளது.ஐந்து திரையரங்குகளை கொண்ட இந்த புதிய திரையரங்க வளாகம் மற்றும் ஸ்பெக்ட்ரம் வியாபார வளாகத்தை நடிகர் கமல்ஹாசன் இன்று (ஜூன் 22) காலை திறந்து வைத்தார்.

சென்னை, பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் இருந்த பழைய வீனஸ் திரையரங்கத்தை இடித்துவிட்டு தான் இந்த புதிய ஸ்பெக்ட்ரம் மல்ட்டி பிளக்ஸ் காம்ப்ளக்ஸை கட்டியிருக்கிறார்கள். இதில் பலவிதமான உணவகங்கள், பிக் பசார், குழந்தைகளுக்கான விளையாட்டு தளங்கள் என அனைத்து வசதிகளும் உள்ளது. இந்த வளாகத்தில் சத்யம் சினிமாஸ் தனது மூன்றாவது புதிய திரையரங்கமான ‘எஸ் 2’ திரையரங்கத்தையும் நிறுவியிருக்கிறது.

வட சென்னையில் நிறுவப்பட்டுள்ள முதல் மல்டி ப்ளக்ஸ் காம்ப்ளக்ஸ் மற்றும் திரையரங்கம் ஸ்பெக்ட்ரம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், “இந்த புதிய மல்டி ப்ளக்ஸ் திரையரங்கம் நிறுவப்பட்டுள்ள இந்த இடத்தில் கடந்த 50ஆண்டுகளாக வீனஸ் என்ற திரையரங்கமும், அதற்கு முன்பு 40 ஆண்டுகளாக நாடக கொட்கை ஒன்றும் இருந்தது. அந்த வகையில் கலை வளர்ந்த பூமி இது. இந்த தலைமுறையிலும் இங்கு ஒரு திரையரங்கம் அதுவும் தற்போதைய தொழில்நுட்பத்தோடு அமைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

சினிமா திரையரங்குகள் கல்யாணம் மண்டபங்களாகவும், அடுக்குமாடி குடியிருப்புகளாகவும் மாறிவந்த காலகட்டத்தில் சினிமாவை வேறு ஒரு கோணத்தில் அனுகியவர்களில் நானும், சத்யம் திரையரங்க முழுமத்தினர் முக்கியமானவர்கள். எந்த தொழிலையும் சிறந்த முறையில் செய்தால் அதில் வெற்றி பெறலாம் என்பதற்கு சத்யம் திரையரங்கத்தினர் ஒரு எடுத்துக்காட்டு. இன்றை காலகட்டத்திற்கு ஏற்ப தங்களை மாற்றிகொண்டு திரையரங்க தொழிலில் சாதித்து வருபவர்கள் அவர்கள். நானும் என்னுடைய ஒவ்வொரு படங்களிலும் அதையேதான் பின்பற்றுவேன். அந்த வகையில் விஸ்வரூபம் படத்தில் புதிய கேமரா ஒன்றை கொண்டு ஒளிப்பதிவு செய்திருக்கிறோம். அதற்காகதான் அமெரிக்கா சென்றேன்.

சினிமாவை வீட்டுக்கே வரவைத்துப் பார்க்கும் காலம் வந்தாலும், திரையரங்குகளில் பார்க்கும் ஒரு சிறந்த அனுபவத்தை திரையரங்குகள் உருவாக்க வேண்டும் அந்த வேலையை சத்யம் திரையரங்கம் மிகச் சரியாக செய்து வருகிறது.” என்றார்.இந்த நிகழ்ச்சியில் சதயம் திரையரங்கத்தின் இயக்குநர் சரூப் ரெட்டி, ஸ்பெக்ட்ரம் மாலின் நிர்வாக இயக்குநர் செந்தில்குமார், தலைவர் சிட்டி பாபு, நடிகர் பரத் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.