Chennai Video
Latest Buzz...
Flash News
47th International Film Festival of India
The 47th International Film Festival of India will begin...
Apple CEO Mr Tim called on Mr Modi today
The CEO of Apple Inc., Mr. Tim Cook, called...
Bank employees to go on strike on July 29
Bank employees across the country will go on a...
Cyclone moves towards Bangladesh
Cyclonic winds bypassed the Indian coast and moved towards...
Summer Special Trains
Southern Railway will operate the following Suvidha special trains...

June 23rd, 2012
கல்லூரி முதல்வர் லக்‌ஷ்மி அவர்களுக்கு ”சாரதா பக்த மணி” பட்டம்..

சென்னை: சிருங்கேரி ஸ்ரீ ஜகத்குரு சங்கராச்சாரியா ஸ்ரீ ஸ்ரீ பாரதிதீர்த்த மஹாஸ்வாமிகள் திருக்கரங்களால் இன்று காலை ஸ்ரீ சாரதாம்பாள் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.. கோவில் அமைந்துள்ள இடம், திரு கே ஆர் சுந்தரராஜன் அவர்கள் ஸ்ரீ மடத்திற்க்கு 6 க்ரவுண்ட் தானமாய் கொடுத்து பின்பு அதில் பெரிதாக கோவில் கட்ட நினைத்தார்.. அதை இப்பொழுது அவர் புதல்வி ஸ்ரீமதி லக்‌ஷ்மி அவர்கள், சிருங்கேரியில் உள்ள சாரதாம்பாள் கோவிலை விடவும் பெரிதாக கட்டி முடித்துள்ளார்: இன்று மாலை நடந்த நிகழ்ச்சியில் தமிழ் நாடு நிதியமைச்சர் திரு ஓ பன்னீர் செல்வம் கலந்து கொண்டு பேசினார்..

பின்னர் ஆச்சார்யருடைய அனுக்ரஹ பாஷணம் நடந்தது..அதிலிருந்து சில துளிகள்:

நம் வாழ்வின் பொன்னாள் என்று எதைஎதையோ நினைத்துக்கொண்டிருக்கிறோம்… காசிக்கு போவதோ, விச்வனாதரை தரிசிப்பதோ பொன்னாள் என்பார்..ஆனால் நம் வாழ்வின் பொன்னாள் என்பது நாம் இறைவனுக்கு என்றெல்லாம் பூஜை செய்ய வாய்ப்பு கிடைக்கிறதோ அன்றெல்லாம் பொன்னாளே!.. ..இந்த ஜென்மத்தில் நாம் இறைவனை நினைப்பதற்கு கூட முன் ஜென்மத்தில் தர்மம் செய்தால் மட்டுமே முடியும்.. முன் ஜென்மத்தில் பெரிய பணக்காரராய் பிறந்து ஒருவருக்கும் தர்மம் செய்யாமல் இல்லை இல்லை என்றால், இந்த ஜென்மத்தில் பிச்சைக்காரனாய் கொடு கொடு என்று பிறப்பார்.. போன ஜென்மத்தில் நாம் பண்ணிய பாவ புண்ணியங்களுக்கு ஏற்பவே இந்த ஜென்மத்தில் சுகமோ துக்கமோ அமையும்.. நாம் எந்த காரியம் செய்தாலும் யோசித்து செய்யவேண்டும்..அதர்மத்தை செய்து விட்டு அதன் பலனை அனுபவிக்கும் போதுதான் நாம் செய்த தவறு புரியும்.. ஆனால் அதற்குரிய பலனை அனுபவித்து தான் ஆக வேண்டும்.. தீயில் கை வைத்தால் அதன் பலனை அனுபவித்து தான் ஆக வேண்டும். தெரியாமல் கை விட்டு விட்டேன்.. சுடக்கூடாது என்றால் முடியுமோ? பதவி இருந்தாலும், பணம் இருந்தாலும் படிப்பு இருந்தாலும் நெருப்பில் கை வைத்தால் அது சுடத்தான் செய்யும்..அது போல நாம் யாராய் இருந்தாலும் நம் எல்லா காரியங்களுக்கும் பலாபலன்கள் அனுபவித்தாகவேண்டும்.அகங்காரமே அதர்மம் செய்வதற்க்கு காரணம். என்னை யார் என்ன செய்ய முடியும் என்ற அகங்காரமே அதர்மத்திற்க்கு காரணம்.. அதன் பலனை அனுபவிக்கத்தான் வேண்டும்.. எமனிடம் நான் யார் தெரியுமா என்றால் முடியுமா?

நமக்கெல்லாம் விவேகம் இருக்கிறது.. நல்லது கெட்டது பகுத்தறியும் அறிவு இருக்கிறது, சாஸ்திரங்கள் சொல்லிக்கொடுக்கிறது.. நம் மனித பிறப்பு மற்ற பிறப்புக்களை விட உயர்ந்தது..  ஆனாலும். தெரிந்தே தவறு செய்வது அதிசயம் தான், ஏதோ தெரியாமல் செய்தோம், சூழ்நிலை என்றால் சரி ஆனால் தெரிந்தே செய்த தப்பிற்கு மன்னிப்பே கிடையாது..அதுவும் திரும்ப திரும்ப செய்தால் எங்கே பிராயசித்தம்? நாம் எப்படி இருக்கவேண்டும் என்பதை முடிவு செய்துக்கொள்ள வேண்டும்.. அதற்ககாக தான் சத்சங்கம் கலந்து கொள்வது, இதிகாசங்கள் படிப்பது.. தர்மத்திற்கு ராமரையும், அதர்மத்தினால் வரும் பயனுக்கு ராவணனையும், துரியோதனனையும் காட்டினார்கள்.ஆனாலும் நான் ராவணனாய் தான்இருப்பேன் என்றால், நமக்கும் விலங்குகளுக்கும் என்ன வித்தியாசம்? நல்லது செய்ய வேண்டும் என்ற தீர்மானமே நம்மை நல்ல மார்க்கத்திற்கு கொண்டு செல்லும்.. நல்ல சத் விசாரம் நடக்கும் போது கூப்பிடாமலே போகவேண்டும்.. பகவானுடைய அனுக்ரஹம் கிடைத்தால் தான் எதுவுமே நடக்கும்..

அதனால் நாம் இறைவனுக்கு என்றெல்லாம் பூஜை செய்ய வாய்ப்பு கிடைக்கிறதோ அன்றெல்லாம் பொன்னாளே! தினமும் நேரமில்லை என்று சொல்லாதீர்கள்.. காலை சீக்கிரம் எழுந்து செய்யுங்கள்..சாப்பிட நேரமில்லை என்கிறோமா? பூஜை என்றால் இரண்டு மூன்று மணி நேரம் செய்யவேண்டும் என்பதில்லை, ஆழ்ந்த பக்தியுடன் மனது ஒன்றி வேறு எண்ணங்கள் இல்லாமல் ஒரு ஐந்து நிமிடம் பூஜை செய்தால் கூட போதும்..அந்த நாள் பொன்னாள் தான்.

எனக்கு பூஜையோ காணிக்கையோ வேண்டாம், ஆச்சார்யா சொன்னார் நான் செய்தேன் என்று சொன்னால் அதுவே எனக்கு சந்தோஷம்.. அனைவருக்கும் எனது ஆசீர்வாதங்கள்.. என்று அருளினார்

மேலும் கல்லூரி முதல்வர் லக்‌ஷ்மி அவர்களது பக்தி,சேவை, அவரது ஏழை மக்களுக்கான மருத்துவமனை முயற்சி, நல்லபடியாக சாரதாம்பாள் கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்ததையும் பாராட்டி “ சாரதா பக்த மணி” என்ற பட்டத்தையும் அருளினார். ஸ்ரீ சாரதா பீடமுறைப்படி பட்டமளிப்பு ஸ்ரீமுகம் வாசிக்கப்பட்டது.. தொடர்ந்து திருமதி காயத்ரி கிரீஷ் அவர்களின் இன்னிசையும், பின்பு சந்திர மௌலீஸ்வர பூஜையும் நடைபெற்றது..