Chennai Video
Latest Buzz...
Flash News
47th International Film Festival of India
The 47th International Film Festival of India will begin...
Apple CEO Mr Tim called on Mr Modi today
The CEO of Apple Inc., Mr. Tim Cook, called...
Bank employees to go on strike on July 29
Bank employees across the country will go on a...
Cyclone moves towards Bangladesh
Cyclonic winds bypassed the Indian coast and moved towards...
Summer Special Trains
Southern Railway will operate the following Suvidha special trains...

June 26th, 2012
தத்வலோகாவில் ஸ்ரீ ஜகத்குரு சங்கராச்சாரியார்

சென்னை: சிருங்கேரி ஸ்ரீ ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ ஸ்ரீ பாரதிதீர்த்த மஹாஸ்வாமிகள் திங்கள் கிழமை விஜய யாத்திரையின் ஒரு அங்கமாக சென்னையில் எல்டாம்ஸ் ரோடில் உள்ள தத்வலோகா வில் எழுந்தருளினார்.

அங்கு நடந்த அனுக்ரஹ பாஷணத்தின் சில துளிகள்:

மனிதனுக்கு எப்போதும் ஏதோ ஒரு வேலையை செய்து கொண்டிருப்பது சுபாவம்.. எதுவுமே இல்லாவிட்டாலும் கால் கையையாவது ஆட்டிக் கொண்டிருப்பார்கள்; சில ப்ரயோஜனமானவை சில காரியங்கள் சாஸ்த்திரோக்த்தமானவை; சாஸ்த்ரம் என்றால் வேதம்; வேதம் சொல்லும் கர்மாவை நாம் அனுஷ்டித்தால் அதற்கு பலன் நிச்சயம். ஒருவருக்கு நாம் உதவி செய்தால் அது அவருக்கும் உதவி நமக்கும் புண்ணியம்.

எவருக்கும் தொல்லை கொடுக்காமல் இருப்பது மிக நல்லது.. அதுவே நமக்கு தொல்லைக்கொடுத்தவருக்கு திரும்ப தொல்லை கொடுக்காமலிருப்பது மிக மிக நல்லது.. சாஸ்த்ரங்களில் மிக முக்கியமான ஒரு விஷயம் சொல்லப்பட்டுள்ளது.. அதாவது இந்த கர்மாக்கள் எல்லாம் மோக்‌ஷத்திற்கு கொண்டு செல்லாது… ஞானமே மோக்‌ஷத்திற்கான வழி! ஞானத்தை அடைவது யார்? கர்மாவை விட்டு வெளியே வந்தவர்க்கு தான் ஞானம் கிடைக்கும்.. சாஸ்த்ரங்கள் நிறைய விஷயங்கள் சொல்கின்றன.. அவற்றை அரை குறையாக மக்களுக்கு சொல்லக்கூடாது…

சன்யாசி என்பவர் யார்? கர்மாவை பண்ணலாம் அனால் அதன் பலனை எதிர்பார்க்க கூடாது.. பகவத்பாதாள் காம்ய கார்யங்களை செய்தாலும் பலனை எதிர்பார்க்கவில்லை.. நிஷ்காம்யமாய் செய்பவர் தான் சன்யாசி.. பகவானிடம் நாம் கேட்க வேண்டியதில்லை.. அவருக்கு என்ன கொடுக்கணும் என்று தெரியும்.. ஆனால் நாமோ சின்ன விஷயத்திற்கு கூட சங்கல்பம் செய்கிறோம்..

நாம் செய்ய கூடிய நிஷ்காம்ய கர்மா தான் நமக்கு ஞானத்தை அளிக்கும்.. யக்யம், தவம் போன்றவை நிஷ்காம்யமாய் செய்தால் ஞானத்திற்கு வழியாகும்.. ராமச்சந்த்ரன், இந்த தத்வலோகாவை நிஷ்காம்யமாக நடத்திக்கொண்டிருக்கிறார்.. ரீடர்ஸ் டைஜஸ்ட்டிலிருந்து வெளியில் வந்து, ஹாங்காங்கிலிருந்து இண்டியா வந்ததும், தத்வலோகாவை எடுத்து நடத்த சொன்னோம்.. முதலில் தயங்கினாலும் அவரது குரு பக்தியினால் ஆச்சார்யா என்ன சொன்னாலும் செய்யும் அசைக்க முடியாத குரு பக்தியினாலும் க்ஷீணித்திருந்த தத்வலோகாவை மீட்டு இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளார். வேறு யாராயிருந்தாலும் இப்படி ஒரு கட்டிடத்தை கட்ட முடியாது.. மிக்க சந்தோஷம்..

அவருடைய குருபக்திக்கு அளவே கிடையாது..மறுபேச்சோ மறு கேள்வியோ கிடையாது.. அதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும்..குருவின் வாக்கிலே ஒரு விஷயம் என்றால் அதை உடனே செய்வார்.. தத்வலோகாவை நடத்த சொன்னபோது, ஆச்சார்யா ஒவ்வொரு இஷ்யூவிற்கும் ஒரு மெசேஜ் கொடுத்தால் செய்கிறேன் என்றார்.. ஒரு முறை மெசேஜ் கொடுக்க நேரமில்லை என்றபோது அப்போ இஷ்யூவும் வராது என்றார்.. இது வரை 25 வருஷங்களாக மெசேஜ் நடந்து கொண்டிருக்கிற்து..தத்வலோகா என்ற வார்த்தைக்கு தத்வ என்றால் உண்மை லொகா என்றால் ஒளி.. உண்மையின் ஒளி ..இந்த தத்வலோகாவிற்காக சேவை செய்யும் அனைவரையும் அசீர்வதிக்கிறேன்.. ராமச்சந்த்ரன் சகோதரி சரளா பற்றியும் சொல்ல வேண்டும் ..உடல் நிலை சரியில்லாத கணவரையும் பார்த்துக்கொண்டு தத்வலோகாவையும் பார்த்துக் கொள்கிறார்… அவரது த்யாக உள்ளம் பாராட்டத்தக்கது.. அனைவருக்கும் என் ஆசீர்வாதம்..