சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் அஸ்வினுக்கு போட்டி ஊதியத்தில் 5 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ்-கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதிய ஆட்டம் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது.
சென்னை பேட்டிங்கின்போது களத்தில் இருந்த அஸ்வின் ஆட்டத்தின் கடைசி பந்தில் “வைடு’ கேட்டு நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்து ஐபிஎல் விதிமுறைகளை மீறியதாக அவருக்கு போட்டி ஊதியத்தில் 5 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது. அவர் தனது தவறை ஒப்புக்கொண்டதோடு, தண்டனையையும் ஏற்றுக்கொண்டார் என்று ஐபிஎல் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.