Chennai Video
Latest Buzz...
Flash News
47th International Film Festival of India
The 47th International Film Festival of India will begin...
Apple CEO Mr Tim called on Mr Modi today
The CEO of Apple Inc., Mr. Tim Cook, called...
Bank employees to go on strike on July 29
Bank employees across the country will go on a...
Cyclone moves towards Bangladesh
Cyclonic winds bypassed the Indian coast and moved towards...
Summer Special Trains
Southern Railway will operate the following Suvidha special trains...

June 12th, 2012
இசைக் கல்லூரி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை

கோவை:அரசு இசைக் கல்லூரி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை ரூ. 250-ல் இருந்து ரூ. 500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, மாவட்ட ஆட்சியர் எம்.கருணாகரன் வெளியிட்ட செய்தி: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவுப்படி, தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்த, தற்போது மாதந்தோறும் வழங்கப்படும் கல்வி உதவித் தொகை ரூ. 250-ல் இருந்து ரூ. 500 ஆக உயர்த்தி வழங்கப்படும். அதேபோல 17 மாவட்ட அரசு இசைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்த, தற்போது மாதந்தோறும் வழங்கப்படும் கல்வி உதவித் தொகையை ரூ. 200-ல் இருந்து ரூ. 400 ஆக உயர்த்தி 2012-13 கல்வியாண்டு முதல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இசைக் கல்லூரியில் சேர்ந்து பயன் அடையலாம் என்று தெரிவித்துள்ளார்.