Chennai Video
Latest Buzz...
Flash News
47th International Film Festival of India
The 47th International Film Festival of India will begin...
Apple CEO Mr Tim called on Mr Modi today
The CEO of Apple Inc., Mr. Tim Cook, called...
Bank employees to go on strike on July 29
Bank employees across the country will go on a...
Cyclone moves towards Bangladesh
Cyclonic winds bypassed the Indian coast and moved towards...
Summer Special Trains
Southern Railway will operate the following Suvidha special trains...

June 12th, 2012
உர விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

சென்னை: உர விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

2009ம் ஆண்டில் 50 கிலோ எடையுள்ள டிஏபி உரம் 486 ரூபாயாக விற்றது என்றும் தற்போது இதன் விலை ஆயிரத்து 250 ரூபாயாக விற்கப்படுவதாக வைகோ சுட்டிக்காட்டியுள்ளார். இதேபோல 2009ல் 316 ரூபாயாக விற்ற 50 கிலோ கலப்பு உரம், தற்போது 857 ரூபாயாகவும், 206 ரூபாய்க்கு விற்கப்பட்ட 50 கிலோ பொட்டாஷ் உரம், தற்போது 840 ரூபாயாக விற்கப்படுவதாகவும் வைகோ தெரிவித்துள்ளார். உரங்களின் விலை ஒரே ஆண்டில் 200 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது, விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் செயல் என்றும், இதை வன்மையாக கண்டிப்பதாகவும் வைகோ தெரிவித்துள்ளார். உர விலையை 2009ம் ஆண்டு நிலைக்கு குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள வைகோ, விலையை குறைக்க மத்திய அரசு முன்வராவிட்டால், உயர்த்தப்பட்ட விலையை விவசாயிகளுக்கு மானியமாக வழங்க முன்வர வேண்டும் என்றும் வைகோ வலியுறுத்தியுள்ளார்.