மாஸ்கோ: உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 8-வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் வெற்றி பெற்றுள்ளார். உலக செஸ் சம்பியன்ஷிப் போட்டி ரஷ்யாவின் மாஸ்கோவில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 12 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் முதல் ஆறு சுற்றுகள் டிராவில் முடிவடைந்தது. இந்நிலையில் நேற்று நடந்த 7-வது சுற்று ஆட்டத்தில் இஸ்ரேலின் போரிஸ் கெல்பான்ட், ஆனந்தை வென்றார். இதைத்தொடர்ந்து இன்று நடந்த 8-வது சுற்று ஆட்டத்தில் கெல்பேன்டுக்கு ஆனந்த் பதிலடி கொடுத்தார். இதன் மூலம் இருவரும் தலா ஒரு வெற்றியுடன் சமன் நிலையில உள்ளனர்.