Chennai Video
Latest Buzz...
Flash News
47th International Film Festival of India
The 47th International Film Festival of India will begin...
Apple CEO Mr Tim called on Mr Modi today
The CEO of Apple Inc., Mr. Tim Cook, called...
Bank employees to go on strike on July 29
Bank employees across the country will go on a...
Cyclone moves towards Bangladesh
Cyclonic winds bypassed the Indian coast and moved towards...
Summer Special Trains
Southern Railway will operate the following Suvidha special trains...

June 30th, 2012
என்ஜினீயரிங் ரேங்க் பட்டியல் வெளியீடு

என்ஜினீயரிங் கட்-ஆப் ரேங்க் பட்டியலை இன்று வெளியிட்ட உயர் கல்வித் துறை செயலாளர் ஸ்ரீதர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
 
அவர் கூறியதாவது:-
 
இந்த ஆண்டு என்ஜினீயரிங் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் சேருவதற்கு 1 லட்சத்து 80 ஆயிரத்து 71 மாணவ- மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர்.  இதில் 5006 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. தகுதி வாய்ந்த 1 லட்சத்து 75 ஆயிரத்து 65 பேருக்கு ரேங்க் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
 
ஜாதி பிரிவுகள் அடிப்படையில் 7 வகையான இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் 2 ஆயிரத்து 92 பேரும், மாற்றுத் திறனாளிகள் 196 பேரும், விளையாட்டு வீரர்கள் 3 ஆயிரத்து 398 பேரும் விண்ணப்பித்துள்ளனர். முதல் தலைமுறை பட்டதாரிகள் 85 ஆயிரத்து 4 பேர் விண்ணப்பித்து இருக்கிறார்கள்.
 
தகுதி உள்ள அனைவருக்கும் தரவரிசை எண், கவுன்சிலிங் நடைபெறும் தேதி ஆகியவை அண்ணா பல்கலைக்கழக இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்களின் விண்ணப்ப எண்ணை பதிவு செய்தால் முழு விவரங்களையும் அறிய முடியும். இந்த விபரங்களை இணையதளத்தில் வெளியீடுவது இது முதல் முறையாகும்.
 
ரேங்க் பட்டியலில் ஒட்டுமொத்த அளவில் முதல் மாணவராக 200-க்கு 200 கட்-ஆப் மதிப்பெண் பெற்று திருவண்ணாமலை மாவட்ட ஆரணியை சேர்ந்த மாணவர் தேவபிரசாத் (பொது பிரிவு) முதல் இடம் பிடித்துள்ளார். 32 பேர் 200-க்கு 200 கட்-ஆப் மார்க் எடுத்துள்ளனர். கடந்த ஆண்டு 88 பேர் 200-க்கு 200 பெற்று இருந்தனர்.
 
பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டில் வேலூர் சிவக்குமார் முதல் இடமும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் திருப்பூர் ஜெகநாதன் முதல் இடமும், தாழ்த்தப்பட்டோர் பிரிவில் துறையூர் மாணவன் சபரிகரன் முதல் இடமும் பிடித்துள்ளனர்.
 
பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்) பிரிவில் பெரம்பலூர் மாணவன் முகமது யூனுஸ் முதல் இடம் பெற்றார். தாழ்த்தப்பட்டோர் (அருந்ததியினர்) பிரிவில் தருமபுரி மாணவன் காவிய அழகன் முதல் இடமும், பழங்குடியினர் பிரிவில் சென்னை அரும்பாக்கம் மாணவி ஸ்ரீதேவி முதல் இடமும் பிடித்துள்ளனர்.
 
விளையாட்டு வீரர்களுக்கான கவுன்சிலிங் வருகிற 5-ந் தேதி நடக்கிறது. தொழில் கல்வி பிரிவினருக்கு 7-ந்தேதி முதல் 11-ந்தேதி வரையும், மாற்றுத் திறனாளிகளுக்கு 12-ந்தேதியும் கவுன்சிலிங் நடைபெறுகிறது.
 
முதல் கட்ட பொது கவுன்சிலிங் ஜூலை 13-ந்தேதி முதல் ஆகஸ்டு 18-ந்தேதி வரை நடக்கிறது. 2-வது கட்ட கவுன்சிலிங் ஆகஸ்டு 19, 20 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. கடந்த ஆண்டை விட இந்த வருடம் கூடுதலாக 30 ஆயிரம் மாணவ- மாணவிகள் என்ஜினீயரிங் பட்டப்படிப்புக்கு விண்ணப்பித்துள்ளனர்.
 
விண்ணப்பித்த அனைவருக்கும் என்ஜினீயரிங் சீட் கிடைக்கும். தமிழ் நாட்டில் 504 அரசு மற்றும் தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 2 லட்சத்து 51 ஆயிரத்து 254 இடங்கள் உள்ளன. இதில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 1 லட்சத்து 59 ஆயிரத்து 89.
 
இது தவிர தனியார் பொறியியல் கல்லூரிகள் 12 ஆயிரத்து 328 இடங்களை அரசு ஒதுக்கீட்டுக்கு ஒப்படைத்துள்ளன. எனவே அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மொத்தம் 1 லட்சத்து 71 ஆயிரத்து 411 ஆக அதிகரித்து உள்ளது. தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீடு மூலம் 80 ஆயிரத்து 37 இடங்கள் நிரப்பப்படுகின்றன.