Chennai Video
Latest Buzz...
Flash News
47th International Film Festival of India
The 47th International Film Festival of India will begin...
Apple CEO Mr Tim called on Mr Modi today
The CEO of Apple Inc., Mr. Tim Cook, called...
Bank employees to go on strike on July 29
Bank employees across the country will go on a...
Cyclone moves towards Bangladesh
Cyclonic winds bypassed the Indian coast and moved towards...
Summer Special Trains
Southern Railway will operate the following Suvidha special trains...

June 10th, 2012
என்.எஸ்.சி. போஸ் சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் இடிப்பு

சென்னை: சென்னையின் நெரிசல் மிகுந்த பகுதிகளில் ஒன்றான பாரிமுனை நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சாலையை (என்.எஸ்.சி. போஸ் சாலை) ஒட்டியுள்ள பகுதிகளில் பாதசாரிகளுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையோரக் கடைகள் அதிகமாக இருந்தன. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநலன் வழக்கின் மீது தீர்ப்பளித்த நீதிபதி, 6 வாரங்களுக்குள் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டார். இதன்படி ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது. ராயபுரம் மன்னார்சாமி கோயில் தெருவில் நடந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிக்கு வியாபாரிகள் எதிர்ப்புத் தெரிவித்ததால், பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன. இந்தப் பணிகள் கூடுதல் போலீஸ் பாதுகாப்புடன் என்.எஸ்.சி. போஸ் சாலையில் சனிக்கிழமை தொடங்கின. இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.  அப் பகுதியில் உள்ள வளைவுகளில் வாகனங்கள் திரும்புவதற்கு இடையூறாக இருந்த கடைகளின் விளம்பர பலகைகள் அகற்றப்பட்டன. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை நடந்த இப்பணியின்போது, சுமார் 20 சாலையோரக் கடைகள் இடிக்கப்பட்டன. இதேபோல, முக்கிய தெருக்களில் இருந்த ஆக்கிரமிப்புக் கடைகளும் இடிக்கப்பட்டன. இவற்றில் நடைபாதை கடைகள், தள்ளுவண்டிக் கடைகளும் அடங்கும். ஆனால், நடைபாதை வியாபாரிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் “என்.எஸ்.சி. போஸ் சாலையில் இருந்து தங்கசாலை வரையில் நடந்த இந்தப் பணியில் ஏராளமான கடைகள் இடிக்கப்பட்டன. ஆக்கிரமிப்புகளை இடிக்கும் பணிகள் தொடர்ந்து வாரமொருமுறை போலீஸ் பாதுகாப்புடன் நடைபெறும். நடைபாதைகளை ஆக்கிரமித்து கடைகள் வைப்போரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதை ஒழுங்குபடுத்த முடியுமே தவிர, கட்டுப்படுத்த முடியாது. இதுபோன்ற வியாபாரிகளுக்கு என ராயபுரம் எம்.சி. சாலையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது’ தெரிவித்தனர்.