Chennai Video
Latest Buzz...
Flash News
47th International Film Festival of India
The 47th International Film Festival of India will begin...
Apple CEO Mr Tim called on Mr Modi today
The CEO of Apple Inc., Mr. Tim Cook, called...
Bank employees to go on strike on July 29
Bank employees across the country will go on a...
Cyclone moves towards Bangladesh
Cyclonic winds bypassed the Indian coast and moved towards...
Summer Special Trains
Southern Railway will operate the following Suvidha special trains...

June 26th, 2012
ஒப்புயர்வு மையமாகும் சென்னை அரசு பல் மருத்துவக்கல்லூரி

சென்னை அரசு பல் மருத்துவக்கல்லூரியை தரம் உயர்த்த ரூ 10 கோடியை ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அரசு வெளியிட்ட அறிக்கையில், பொதுமக்களின் நலன் கருதி, நவீன வசதிகளுடன் முதல்வர் ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்ட சென்னையிலுள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை ஒப்புயர்வு மையமாக அதாவது Centre of Excellence in Dentistry ஆக தரம் உயர்த்த 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வகையில், பல் மருத்துவமனைகளை நவீனப்படுத்தும் வகையிலும், அதிக மக்களுக்கு விரைந்து சிகிச்சை அளிப்பதற்கு வசதியாகவும் சென்னையிலுள்ள அரசு பல் மருத்துவமனைக்கு 1 கோடியே 24 லட்சத்து 75 ரூபாய் செலவில் மின்சாரத்தால் இயங்கும் 149 பல் சிகிச்சை நாற்காலிகள் வாங்குவதற்கு முதல்வர்ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.