Chennai Video
Latest Buzz...
Flash News
47th International Film Festival of India
The 47th International Film Festival of India will begin...
Apple CEO Mr Tim called on Mr Modi today
The CEO of Apple Inc., Mr. Tim Cook, called...
Bank employees to go on strike on July 29
Bank employees across the country will go on a...
Cyclone moves towards Bangladesh
Cyclonic winds bypassed the Indian coast and moved towards...
Summer Special Trains
Southern Railway will operate the following Suvidha special trains...

June 23rd, 2012
கியோடோ பரிசு – இந்திய பேராசிரியர் காயத்ரி ஸ்பிவாக்

ஜப்பானின் உயர்ந்த தனியார் விருதான கியோடோ பரிசை பிரபல இந்திய தத்துவ அறிஞரும் மொழியியலாளருமான பேராசிரியர் காயத்ரி ஸ்பிவாக் (70) பெற்றுள்ளார்.

உலகப் புகழ்பெற்ற எலக்ட்ரானிக் நிறுவனமான கியோசெராவின் நிறுவனரின் அறக்கட்டளை வழங்கும் கியோடோ பரிசு ஜப்பானின் மிக உயரிய தனியார் விருதாகும். ஆண்டுதோறும் விஞ்ஞானம் உள்ளிட்ட துறைகளில் உலக அளவிலான சாதனையாளர்களுக்கு இப்பரிசு அளிக்கப்படுகிறது. இந்த ஆண்டு கலை, தத்துவ இயலுக்கான விருது காயத்ரி ஸ்பிவாக்குக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இவர் அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார். புகழ்பெற்ற பிரெஞ்சு தத்துவ அறிஞரான ஜாக் டெரிடாவின் மொழித் தத்துவ நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் காயத்ரி.