Chennai Video
Latest Buzz...
Flash News
47th International Film Festival of India
The 47th International Film Festival of India will begin...
Apple CEO Mr Tim called on Mr Modi today
The CEO of Apple Inc., Mr. Tim Cook, called...
Bank employees to go on strike on July 29
Bank employees across the country will go on a...
Cyclone moves towards Bangladesh
Cyclonic winds bypassed the Indian coast and moved towards...
Summer Special Trains
Southern Railway will operate the following Suvidha special trains...

April 9th, 2012
சித்திரை விஷூவையொட்டி சபரிமலையில் நடை திறப்பு

திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த வருட சித்திரை விஷூ பூஜைகளுக்காக நடை நாளை திறக்கப்படுகிறது. மாலை 5.30 மணியளவில் தந்திரி கண்டரரு மகேஷ்வரரு முன்னிலையில் மேல்சாந்தி பாலமுரளி நம்பூதிரி நடை திறப்பார்.

நாளை மறுநாள்(11ம்தேதி) முதல் 18ம் தேதிவரை தினமும் கணபதிஹோமம், உஷபூஜை, களபாபிஷேகம், புஷ்பாபிஷேகம் ஆகிய வழக்கமான பூஜைகளும், படிபூஜையும் நடைபெறும். இந்த நாட்களில் தினமும் நெய்யபிஷேகமும் நடைபெறும். இந்த வருட விஷூ கனி தரிசனம் ஏப்ரல் 14ம்தேதி நடைபெறுகிறது.

அன்று அதிகாலை 4 மணிமுதல் காலை 7 மணி வரை பக்தர்களுக்கு விஷூ கனி தரிசனம் செய்யலாம். அன்று சபரிமலை வரும் பக்தர்களுக்கு தந்திரி கண்டரரு மகேவஸ்வரரு, மேல்சாந்தி பாலமுரளி நம்பூதிரி ஆகியோர் விஷூ கைநீட்டம் அளிப்பார்கள்.(பத்கர்களுக்கு வருடம் முழுவதும் செல்வம் செழிப்பதற்காக பணம் வழங்குவது கைநீட்டமாகும்) 18ம் தேதி இரவு 10 மணியளவில் கோயில் நடை சாத்தப்படும்.