Chennai Video
Latest Buzz...
Flash News
47th International Film Festival of India
The 47th International Film Festival of India will begin...
Apple CEO Mr Tim called on Mr Modi today
The CEO of Apple Inc., Mr. Tim Cook, called...
Bank employees to go on strike on July 29
Bank employees across the country will go on a...
Cyclone moves towards Bangladesh
Cyclonic winds bypassed the Indian coast and moved towards...
Summer Special Trains
Southern Railway will operate the following Suvidha special trains...

May 11th, 2012
தமிழகத்தில் பா.ஜ., வளர்ச்சி பெற்றுள்ளது….

மதுரை: “”தமிழகத்தில் பா.ஜ., வளர்ச்சி பெற்றுள்ளது. ஆளும் தகுதி வாய்ந்த கட்சியாக திகழ்கிறது,” என மதுரையில் ஐந்தாவது மாநில மாநாட்டின் 2வது நாளான நேற்று நடந்த பொதுக்குழுவில் முன்னாள் மாநில தலைவர் இல.கணேசன் குறிப்பிட்டார்.

முன்னாள் மாநில தலைவர்கள் கே.என்.லட்சுமணன், சி.பி.ராதாகிருஷ்ணன், துணை தலைவர் எச்.ராஜா, அமைப்பு செயலாளர் மோகன்ராஜூலு, பொது செயலாளர்கள் சரவணபெருமாள், ரமேஷ், சுப.நாகராஜன், மாநில செயலாளர்கள் சுரேந்திரன், வானதி, நகர் தலைவர் ராஜரத்தினம், மருத்துவர் அணி மாநில தலைவர் ராஜேந்திரன், பிரசார அணி செயலாளர் சசிராமன் உட்பட பலர் பங்கேற்றனர். மாநாட்டு பந்தலில் அமைக்கப்பட்ட கண்காட்சியை ஏராளமானோர் பார்வையிட்டனர். மாநாட்டு பணிகளில் ஈடுபட்டோர் மட்டும் பங்கேற்ற கூட்டம் நேற்றிரவு நடந்தது. அத்துடன் மாநாடு நிறைவுற்றது.

இரண்டு நாள் மாநாட்டில் பத்தாயிரம் பேருக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பரிசோதனை செய்யப்பட்டது. சிறு காயம், மயக்கம் போன்றவைகளால் முகாமிற்கு வந்த மூவாயிரம் பேருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. 200 பேர் ரத்ததானம் செய்தனர்.

மாநாட்டு நிகழ்வுகள் குறித்து பொதுக்குழு உறுப்பினர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அவர்களது கருத்துக்களை மாநில நிர்வாகிகள் பதிவு செய்து கொண்டனர்.

மாவட்ட தலைவர் கந்தன் வரவேற்றார். மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்து பேசியதாவது: இலங்கை, மலேசியா உட்பட வெளிநாடுகளில் வாடும் தமிழர்களுக்காக பா.ஜ., குரல் கொடுக்கிறது. தாமரை சங்கமம் மாநாடு ஒரு துவக்கமே. இலங்கை சென்ற சுஷ்மா சுவராஜ் குறித்து விமர்சனம் எழுந்தது. ஆனால் அவர் பெற்ற பரிசு பொருட்களை கூட மத்திய அரசிடம் ஒப்படைத்தார். இலங்கை சென்ற தி.மு.க.,- காங்., மற்றும் விடுதலை சிறுத்தை எம்.பி.,க்கள் அப்படி செய்தார்களா? இம்மாநாடு வெற்றிகரமாக முடிந்ததுடன் கடமை முடிந்ததாக கருதமாட்டேன். தமிழகத்தில் பா.ஜ., ஆட்சி அமைந்தால் தான் உண்மையான மகிழ்ச்சி. தமிழகத்தில் 45 ஆண்டுகளாக தொடரும் திராவிட கட்சிகளின் ஆட்சியை அகற்ற வேண்டும். தமிழர்களுக்காக பாடுபடும் பா.ஜ.,வை ஆட்சியில் அமர்த்த பாடுபட வேண்டும். அதற்காக மக்களை சந்திக்க வேண்டும், என்றார்.