Chennai Video
Latest Buzz...
Flash News
47th International Film Festival of India
The 47th International Film Festival of India will begin...
Apple CEO Mr Tim called on Mr Modi today
The CEO of Apple Inc., Mr. Tim Cook, called...
Bank employees to go on strike on July 29
Bank employees across the country will go on a...
Cyclone moves towards Bangladesh
Cyclonic winds bypassed the Indian coast and moved towards...
Summer Special Trains
Southern Railway will operate the following Suvidha special trains...

April 10th, 2012
தமிழகத்தில் வாகனங்களுக்கான வரி உயர்கிறது

சென்னை: பட்ஜெட் உரையின்போது, சுற்றுலா பயண வாகனம்; மேக்சி வாகனம்; தனியார் சேவை வாகனம்; மாற்று பஸ்கள்; கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் வாகனம்; பிற மாநில ஒப்பந்த வாகனங்களுக்கான வரி சீரமைக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, வாகன வரி விதிப்புச் சட்டத்தைத் திருத்தி அமைக்கும் மசோதாவை, போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, நேற்று சட்டசபையில் தாக்கல் செய்தார்.

சுற்றுலா வாகனங்கள் போன்ற, மேக்சி வாகனங்கள், தனி நபர் வாகனமாக பயன்படுத்தப்படும்போது, அவை ஆயுட் கால வரி விதிப்பு செய்யப்படுவதால், சுற்றுலா கார்களுக்கும், ஆயுட் கால வரி விதிப்பு செய்ய, அரசு முடிவு செய்துள்ளது.பல்வேறு தரைப் பரப்புகள் மற்றும் பல்வேறு எண்ணிக்கையிலான இருக்கைகள் உடையதாக சுற்றுலா, மேக்சி கேப்கள் இருப்பதால், இருக்கைகளின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு, இவற்றுக்கு காலாண்டு வரி வசூலிப்பதில், இடர்ப்பாடுகள் உணரப்பட்டுள்ளன.

* எனவே, 6 சதுர மீட்டருக்கு
மேற்பட்ட தரைப்பரப்பு கொண்ட புதிய வாகனங்களுக்கு, ஆயுட்கால வரி விதிப்பு
செய்யவும்; ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கும், தரைப்பரப்பின்
அடிப்படையில் வரி விதிப்பு செய்யவும், முடிவு செய்யப் பட்டுள்ளது.

* அகழ்வு இயந்திரம் (எக்ஸ்கவேட்டர்), சாலை செப்பனிடும் இயந்திரம் (ரோடுஸ்க்ராப்பர்), பளு தூக்கிகள் (கிரேன்) போன்ற கட்டுமானத் தளவாட ஊர்திகள் பயன்பாடு அதிகரித்துள்ளது. இவற்றுக்கு விதிக்கப்படும் ஆண்டு வரி, மிகவும் குறைவாக உள்ளது. எனவே, இத்தகைய வாகனங்களுக்கு, 10 ஆயிரம் ரூபாய் ஆண்டு வரி விதிக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது.

* வாகன உரிமையாளரின் வணிகம் அல்லது தொழிலுடன் தொடர்புடைய நபர்களைச் சுமந்து செல்வதற்காக உள்ள, தனி நபர் சேவை வாகனங்கள் மீது விதிக்கப்படும் வரி, வழக்கமான நிலை வாகனங்களுக்கு விதிக்கப்படும் வரியை விட, குறைவாக உள்ளது. எனவே, குளிர்சாதன வசதி கொண்டவை, இல்லாதவை என, வகைப்படுத்தி,
இருக்கைகளின் அடிப்படையில், காலாண்டு வரி விதிக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது.

*இயங்கு நிலை பஸ்களை விட, நூற்றுக்கு 25 சதவீதம் குறைவான அளவில் வரி, இருப்பு நிலை (ரிசர்வ் ஸ்டேஜ்) வாகனங்களுக்கு விதிக்கப்படுகிறது.

* இருப்பு நிலை அல்லது உபரி பஸ்கள், சிறப்பு அனுமதிச் சீட்டின் பேரில், ஒப்பந்த வாகனங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.

எனவே, சிறப்பு நிகழ்வுகளில் அந்த வாகனங்கள் பயன்படுத்தப்படும்போது, தனிப்பட்ட வரி ஒன்றை விதிக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிற மாநில வாகனங்களுக்கு விதிக்கப்படும் வரி, தமிழகத்தில் உள்ள, அதற்கு சமமான வாகனங்களிடம் வசூலிக்கப்படும் வரி வீதத்துக்கு சமமாக உள்ளது. பிற மாநில வாகனங்கள், சாலையை அதிக அளவில் பயன்படுத்துவதாலும்; தங்கள் மாநிலத்தில், வேறு மாநில வாகனங்களுக்கு, அதிக வீதத்தில் வரி வசூலிப்பதாலும், அத்தகைய வாகனங்களுக்கு, அதிக வீதத்தில் வரி விதிக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு, மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இம்மசோதா, சட்டசபையில் விரைவில் நிறைவேற்றப்பட உள்ளது.