Chennai Video
Latest Buzz...
Flash News
47th International Film Festival of India
The 47th International Film Festival of India will begin...
Apple CEO Mr Tim called on Mr Modi today
The CEO of Apple Inc., Mr. Tim Cook, called...
Bank employees to go on strike on July 29
Bank employees across the country will go on a...
Cyclone moves towards Bangladesh
Cyclonic winds bypassed the Indian coast and moved towards...
Summer Special Trains
Southern Railway will operate the following Suvidha special trains...

April 9th, 2012
தமிழகம் முழுவதும் திமுக இன்று ஆர்ப்பாட்டம்:

சென்னை: தமிழகத்தில் மி‌ன் க‌ட்டண உய‌ர்வு, வ‌ரி ‌வி‌தி‌ப்பு உ‌ள்‌ளி‌ட்ட ‌பிர‌ச்சனைகளை க‌ண்டி‌த்து த‌மி‌ழ்நாடு முழுவது‌ம் இன்று திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இது குறித்து திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,அதிமுக ஆட்சி பொறுப்பேற்றதுமுதல் தமிழக மக்களை வாட்டி வதைக்கும் வண்ணம் புதிய வரி விதிப்பு, பால் விலை உயர்வு, பஸ் மற்றும் மின் கட்டண உயர்வு என்று வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளது. மின்சாரமாவது முறையாக வழங்கப்படுகிறதா என்றால் இல்லை. கிராமங்களிலும் நகரங்களிலும் பல மணி நேரம் மின்வெட்டு கொடுமை காரணமாக மக்கள் படாதபாடுபடுகின்றனர். தேர்வு நேரத்தில் மாணவர்கள் படிக்க இயலாமல் திணறுகின்றனர். ஆனால் அனால் தமிழக அரசு இதுபற்றி சிறிதும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

எதிர்க்கட்சியினரை எந்தெந்த வழிகளில் எல்லாம் பழி வாங்கலாம், அவர்கள் மீது என்ன வழக்குகளைத் தொடுக்கலாம் என்பதிலேயே கண்ணும் கருத்துமாக உள்ளனர். திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நல்ல திட்டங்களையெல்லாம் தேடிப் பார்த்து அதற்கு மூடு விழா காணுகின்றனர்.

கூடங்குளம் அணுமின் நிலையப் பணிகள் திட்டமிட்டபடி 6 மாதங்களுக்கு முன்பே நடந்து முடிந்து தமிழகத்துக்கு 1,000 மெகாவாட்டுக்கு மேல் மின்சாரம் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், போராட்டக் குழுவினருடன் சேர்ந்து அதிமுக அரசு இரட்டை நிலை மேற்கொண்டது முறையற்ற செயல்.

மக்கள் நலப் பணியாளர்கள் 13 ஆயிரம் பேர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதையெல்லாம் கண்டிக்கும் வகையில் ஏ‌ப்ர‌ல் 9ஆ‌ம் தே‌தி இன்று திங்க‌ட்கிழமை மாவட்டத் தலைநகரங்களில் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.