Chennai Video
Latest Buzz...
Flash News
47th International Film Festival of India
The 47th International Film Festival of India will begin...
Apple CEO Mr Tim called on Mr Modi today
The CEO of Apple Inc., Mr. Tim Cook, called...
Bank employees to go on strike on July 29
Bank employees across the country will go on a...
Cyclone moves towards Bangladesh
Cyclonic winds bypassed the Indian coast and moved towards...
Summer Special Trains
Southern Railway will operate the following Suvidha special trains...

June 21st, 2012
நாமக்கல்லில் ஐஏஎஸ் பயிற்சி மையம்

நாமக்கல் மாவட்டத்தில் மோகனூர் சாலை பெரியபட்டியில் (பழைய நீதிமன்ற வளாகம்)போட்டித்தேர்வுகளுக்கு என்றே சிறப்பு நூலகத்துடன் கூடிய பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச தரத்திலான நூலகத்துடன் கூடிய ஐஏஎஸ் பயிற்சி மையம் நாமக்கல்லில் அமைவதில் மாவட்ட நூலக அலுவலர் எஸ்.ஜெகதீஸ் பெறும் பங்கு வகித்துள்ளார். ஏற்கனவே, அவரது முயற்சியில் தர்மபுரியில் அமைந்த ஐஏஎஸ் பயிற்சி மையம் அரசாணையுடன் கூடியதாக இல்லாததால் காலப்போக்கில் மாணவர்களுக்கு உரிய பலனை தருவாக இல்லை.இதைக்கருத்தில் கொண்டு நாமக்கல்லில் அமைந்துள்ள இந்த நூலகம் மற்றும் போட்டித்தேர்வு பயிற்சி மையத்துக்கு அரசாணையும், நிரந்தர அலுவலர் பணியிடமும் பெறப்பட்டுள்ளது. அத்துடன் நிரந்தரமாக இங்கு மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி கிடைத்திட தொழிலதிபர்களை இணைத்து அறக்கட்டளையும், அந்த அறக்கட்டளைக்கு சென்னை மனிதநேய அறக்கட்டளையுடன் தொடர்பும் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. இதன்மூலம் இப்பயிற்சி மையம் தொடர்ந்து சிறந்த பலனை அளிக்கும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெரும்பாலான நூலகர்கள் தங்களது பணிகளை மட்டுமே செய்துவிட்டு ஒதுங்கும் வேளையில் நாமக்கல்லில் இந்த ஐஏஎஸ் பயிற்சி மையம் அமைய மாவட்ட நூலக அலுவலர் ஜெகதீஸ் மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டுக்குறியது.

ரூ.47.55 லட்சம் மதிப்பில் இருதளங்களில் கட்டப்பட்டுள்ள இந்த நூலகத்துடன் கூடிய போட்டித்தேர்வு பயிற்சி மையத்தில், சிவில் சர்வீஸஸ் தேர்வு எழுதுபவர்களுக்கு பயிற்சி அளிக்க டிஜிட்டல் ஸ்கிரீனுடன் கூடிய அறை அமைந்துள்ளது. இங்கு ஒரே நேரத்தில் 120 பேர் வரை அமர்ந்து பயிற்சி பெற முடியும். தவிர, சிவில் சர்வீஸஸ், யூபிஎஸ்சி, வங்கி, ரயில்வே உள்ளிட்ட போட்டித்தேர்வுகளுக்கு தயாராக தேவையான உயர்தரமான புத்தகங்கள் அடங்கிய நூலக அறை மற்றும் ஆண், பெண் அமர்ந்து படிக்க வசதியாக சிறப்பு வசதிகளுடன் கூடிய தனித்தனி அறைகளும் அமைக்கப்பட்டுள்ளன.