Chennai Video
Latest Buzz...
Flash News
47th International Film Festival of India
The 47th International Film Festival of India will begin...
Apple CEO Mr Tim called on Mr Modi today
The CEO of Apple Inc., Mr. Tim Cook, called...
Bank employees to go on strike on July 29
Bank employees across the country will go on a...
Cyclone moves towards Bangladesh
Cyclonic winds bypassed the Indian coast and moved towards...
Summer Special Trains
Southern Railway will operate the following Suvidha special trains...

May 9th, 2012
நித்யானந்தரை நியமித்தது தவறு-ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்

கிருஷ்ணகிரி: மதுரை இளைய ஆதீனமாக நித்யானந்தரை நியமித்தது தவறு என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி (படம்) சுவாமிகள் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி சங்கர மடத்தில் புதன்கிழமை ஸ்ரீ நந்தன ஆண்டு பஞ்சாங்கத்தை வெளியிட்டு அவர் கூறியது:
மதுரை இளைய ஆதீனமாக நித்யானந்தரை நியமித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. திருஞானசம்பந்தர் பரம்பரையைச் சேர்ந்தவர்களே மதுரை ஆதீனமாக வரமுடியும். எனவே, நித்யானந்தருக்கு பட்டம் சூட்டியது தவறு.
மேலும், ஆதீனமாக வருபவர்கள் மொட்டை போட்டு ருத்ராட்சம் அணிந்திருக்க வேண்டும். ஆனால், நித்யானந்தர் பதவியேற்ற நாளிலிருந்து தலை முடியுடன் உள்ளார். எனவே, அவர் ஆதீனகர்த்தராகத் தகுதியவற்றவர். அவரது நியமனம் குறித்து சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு எங்கள் ஆதரவு உண்டு.
தமிழகத்தில் ஆன்மிகத்தில் நம்பிக்கை அதிகரித்துள்ளது என்றார் ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.