Chennai Video
Latest Buzz...
Flash News
47th International Film Festival of India
The 47th International Film Festival of India will begin...
Apple CEO Mr Tim called on Mr Modi today
The CEO of Apple Inc., Mr. Tim Cook, called...
Bank employees to go on strike on July 29
Bank employees across the country will go on a...
Cyclone moves towards Bangladesh
Cyclonic winds bypassed the Indian coast and moved towards...
Summer Special Trains
Southern Railway will operate the following Suvidha special trains...

June 16th, 2012
பால் கெட்டுப் போகாமல் இருக்க குளிர் சாதன பெட்டியுடன் கூடிய வாகனம்

சென்னை: முதல்- அமைச்சர் ஜெயலலிதா ஆணைப்படி பால்வளத்துறை அமைச்சர் மாதவரம் மூர்த்தி அதிகாரிகளின் கூட்டத்தை கூட்டி திடீர் ஆய்வு நடத்தினார்.கூட்டத்தில் அமைச்சர் மாதவரம் மூர்த்தி கூறியதாவது:-
 
முதல்-அமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அறிவித்துள்ள பல்வேறு பால் வளத்திட்டங்களின் பயனாக ஒன்றியங்கள் மூலம் தற்போது பால் கொள்முதல் தினமும் 25.50 லட்சம் லிட்டராக உயர்ந்து சாதனை படைத்துள்ளது.எனவே பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி தரமான பால் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
பால் பண்ணைகளில் இருந்து குறித்த நேரத்தில் பால் வண்டிகளை அனுப்புவதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும். கோடை காலத்தில் மிக அதிக அளவில் வெப்ப நிலை இருப்பதால் பாலின் தரம் குன்றாமல் இருப்பதற்காக தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு, சரியான குளிர்பதன நிலையில் பதப்படுத்தி அனுப்ப வேண்டும்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஆவின் பால் பொருள் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தேவையான பால் மற்றும் பால் பொருட்களை வழங்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
 
தற்போது பால் கெட்டுப் போகாமல் இருக்க குளிர் சாதன பெட்டியுடன் கூடிய வாகனத்தில் பால் பொருட்களை கொண்டு செல்லவும் தற்போது அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
பொதுமக்கள் தங்கள் புகார் மற்றும் ஆலோசனைகளை 18004253300 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.