Chennai Video
Latest Buzz...
Flash News
47th International Film Festival of India
The 47th International Film Festival of India will begin...
Apple CEO Mr Tim called on Mr Modi today
The CEO of Apple Inc., Mr. Tim Cook, called...
Bank employees to go on strike on July 29
Bank employees across the country will go on a...
Cyclone moves towards Bangladesh
Cyclonic winds bypassed the Indian coast and moved towards...
Summer Special Trains
Southern Railway will operate the following Suvidha special trains...

June 12th, 2012
புதுக்கோட்டை விறுவிறுப்பான வாக்குப்பதிவு

புதுக்கோட்டை:  புதுக்கோட்டையில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. புதுக்கோட்டைத் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள 224 வாக்குப்பதிவு மையங்களில், வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். வாக்குப்பதிவு பாதுகாப்புப் பணியில் சுமார் 2 ஆயிரம் காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்குப்பதிவு முழுவதும் இணையம் மூலமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. காலை 8 மணிக்குத் தொடங்கும் வாக்குப் பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைகிறது.

இத் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முத்துக்குமரன் சாலை விபத்தில் உயிரிழந்ததை அடுத்து இங்கு இடைத் தேர்தல் நடைபெறுகிறது அதிமுக சார்பில் கார்த்திக் தொண்டைமானும், தேமுதிக சார்பில் ஜாகீர் உசேனும் நிறுத்தப்பட்டுள்ளனர். திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் தேர்தலைப் புறக்கணித்துள்ள நிலையில், ஆளும்கட்சியான அதிமுகவுக்கும், எதிர்க்கட்சியான தேமுதிகவுக்கும் இடையே நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்திய ஜனநாயகக் கட்சி சார்பில் என்.சீனிவாசன், சில சுயேச்சை வேட்பாளர்களும் தேர்தல் களம் காணுகின்றனர்.

 ஆண்கள் 97,371 பேரும், பெண்கள் 97,604 பேரும் மற்றும் இதர வாக்காளர்கள் பிரிவில் 5 நபர்கள் உள்பட மொத்தம் 1,94,980 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். மொத்தம் 224 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப் பதிவுக்கு 251 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 502 வாக்குப் பதிவு இயந்திரங்களும் வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தேர்தல் பணியில் மொத்தம் 1,095 அலுவலர்கள் உள்ளனர். வாக்குச் சாவடிகள் அனைத்தும் மூன்றடுக்கு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

 இப்பணிகளில் 450 ஊர்க்காவல் படையினரும், உள்ளூர் காவல் துறையினர் 1,392 பேரும், தமிழ்நாடு சிறப்புக் காவல் படை காவலர்கள் 348 பேரும், எல்லைப் பாதுகாப்புப் படை காவலர்கள் 452 பேரும் ஆக மொத்தம் 2,642 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் எனக் கண்டறியப்பட்டுள்ள 37 வாக்குச் சாவடிகளைக் கண்காணிக்க மைக்ரோ (நுண்) பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவை நேரடியாக விடியோ பதிவு செய்யவும் அவற்றை ஆன்-லைன் மூலம் கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக தனியாக விடியோ கேமராக்கள், லேப்-டாப் கருவிகள் உள்ளிட்டவை வாக்குச் சாவடிகளில் வைக்கப்பட்டுள்ளன.  வாக்குப் பதிவு நடவடிக்கைகளை சென்னையில் தலைமைச் செயலகத்தில் உள்ள தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தில் இருந்து பார்க்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

செல்போன் எஸ்.எம்.எஸ். மூலம் மணிக்கொரு முறை வாக்குப் பதிவு நிலவரத்தைத் தெரிவிக்கவும் வாக்குச் சாவடி அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.வாக்குப் பதிவு நிறைவடைந்ததும், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் புதுக்கோட்டையில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்படும்.

வாக்கு எண்ணிக்கை வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 15) நடைபெறுகிறது. வாக்குகள் மின்னணு இயந்திரத்தில் பதிவாவதால், அன்றைய தினம் காலை 11 மணிக்குள்ளாக முடிவுகள் தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.