Chennai Video
Latest Buzz...
Flash News
47th International Film Festival of India
The 47th International Film Festival of India will begin...
Apple CEO Mr Tim called on Mr Modi today
The CEO of Apple Inc., Mr. Tim Cook, called...
Bank employees to go on strike on July 29
Bank employees across the country will go on a...
Cyclone moves towards Bangladesh
Cyclonic winds bypassed the Indian coast and moved towards...
Summer Special Trains
Southern Railway will operate the following Suvidha special trains...

June 1st, 2012
மின் வெட்டு நேரம் குறைக்கப்படுகிறது

சென்னை: தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,தமிழ்நாட்டில் தற்போது நிலவி வரும் மின் பற்றாக்குறையை படிப்படியாக குறைப்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. கடந்த சில வாரங்களாக காற்றாலைகளின் மூலம் அதிக அளவு மின்சாரம் கிடைப்பதன் காரணமாக, தமிழ்நாட்டின் மின் நிலைமை தற்போது கணிசமான அளவு முன்னேற்றம் அடைந்திருக்கிறது. இது மட்டுமல்லாமல், 10.5.2012 அன்று தீ விபத்து ஏற்பட்டதன் காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்ட மேட்டூர் அனல் மின் நிலையத்தில் போர்க்கால அடிப்படையில் பணிகள் முடுக்கிவிடப்பட்டதையடுத்து, இன்று முதல் மீண்டும் மேட்டூர் அனல் மின் நிலையம் தனது முழு உற்பத்தித் திறனான 840 மெகாவாட் மின் உற்பத்தியை செய்யத் தொடங்கிவிட்டது.

இந்தச் சூழ்நிலையில், தற்போது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நாளை முதல் (2.6.2012) தளர்த்த இந்தக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதன்படி, உயர் அழுத்த மற்றும் குறைந்த அழுத்த தொழிற்சாலைகளுக்கான வாரம் ஒரு நாள் மின்சார விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமை கட்டாய மின்சார விடுமுறை ஆகியவை முற்றிலுமாக நீக்கப்படும்.
தற்போது சென்னையில் வீட்டு பயனீட்டாளர்களுக்கான மின் வெட்டு இரண்டு மணி நேரத்திலிருந்து ஒரு மணி நேரமாகவும், தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் நான்கு மணி நேரத்திலிருந்து மூன்று மணி நேரமாகவும் குறைக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் கூறியுள்ளார்.