Chennai Video
Latest Buzz...
Flash News
47th International Film Festival of India
The 47th International Film Festival of India will begin...
Apple CEO Mr Tim called on Mr Modi today
The CEO of Apple Inc., Mr. Tim Cook, called...
Bank employees to go on strike on July 29
Bank employees across the country will go on a...
Cyclone moves towards Bangladesh
Cyclonic winds bypassed the Indian coast and moved towards...
Summer Special Trains
Southern Railway will operate the following Suvidha special trains...

May 25th, 2012
முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம்

சென்னை: தமிழகத்துக்கு கூடுதல் மண்ணெண்ணெய் வழங்க வேண்டும் என்று கோரி முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் 2011 ஏப்ரல், மே மாதங்களில் தமிழகத்துக்கு 52,806 கிலோலிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வந்தது. பின்னர் எந்தவித காரணமும் இன்றி அது 44,580 கிலோலிட்டராக குறைக்கப்பட்டது. இப்போது 2012 ஏப்ரல்-ஜூன் காலாண்டுக்கான மண்ணெண்ணெய் 39,429 கிலோலிட்டராக குறைக்கப்பட்டுள்ளது. இது ஏழை, எளிய மக்களை மிகவும் பாதிக்கும். அதிமுகவுக்கு வாக்களித்தார்கள் என்பதற்காக பொதுவிநியோகத்திட்டத்தின் மூலம் அவர்களுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெயின் அளவைக் குறைத்திருப்பது முற்றிலும் நியாயமற்றது, ஏற்றுக்கொள்ள முடியாதது. எனவே மாதத்துக்கு 65,140 கிலோலிட்டர் மண்ணெண்ணெயை தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். அல்லது 2011 ஏப்ரல்-மேயில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 52,806 கிலோலிட்டரையாவது ஒதுக்க வேண்டும் என்று ஜெயலலிதா தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.