Chennai Video
Latest Buzz...
Flash News
47th International Film Festival of India
The 47th International Film Festival of India will begin...
Apple CEO Mr Tim called on Mr Modi today
The CEO of Apple Inc., Mr. Tim Cook, called...
Bank employees to go on strike on July 29
Bank employees across the country will go on a...
Cyclone moves towards Bangladesh
Cyclonic winds bypassed the Indian coast and moved towards...
Summer Special Trains
Southern Railway will operate the following Suvidha special trains...

June 13th, 2012
1006 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

 சென்னை: இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 1006 ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை வரும் திங்கள்கிழமை (ஜூன் 18) முதல்வர் ஜெயலலிதா நடத்தி வைக்கிறார்.

 கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் உள்ள பல்வேறு முக்கிய கோயில்களில் அரசு சார்பில் இலவச திருமணங்களை முதல்வர் ஜெயலலிதா நடத்தி வைத்தார்.குறிப்பாக, 2002 முதல் 2003-ம் ஆண்டுகளில் 1008 மற்றும் 1053 ஜோடிகளுக்கு இலவச திருமணங்களை நடத்தி வைத்து அவர்கள் நல்ல முறையில் வாழ்வதற்குத் தேவையான வீட்டு உபயோகப் பொருள்களை அளித்தார்.மேலும், 2001 முதல் 2006-ம் ஆண்டுகளுக்குள் மட்டும் 2,500-க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு திருமணங்களை நடத்தி வைத்து அவர்களின் வாழ்க்கைக்குத் தேவையான சீர்வரிசைப் பொருள்களை வழங்கினார். 

இதேபோன்று இப்போதும் 1006 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது. இதற்கென, சென்னை திருவேற்காடு அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில் அருகே 9 ஏக்கர் பரப்பில் ஒரு லட்சத்து 65 ஆயிரம் சதுர அடியில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. வரும் திங்கள்கிழமை காலை 9.30 மணியில் இருந்து 10.29 மணிக்குள் திருமண நிகழ்வு நடைபெறவுள்ளது. ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து முதல்வர் ஜெயலலிதா உரையாற்றுகிறார்.சென்னை திருவேற்காட்டில் நடைபெறும் இந்தத் திருமண நிகழ்ச்சியில் ஒவ்வொரு ஜோடிக்கும் ரூ.10 ஆயிரத்துக்கும் அதிகமான 29 சீர்வரிசைப் பொருள்கள் வழங்கப்பட உள்ளன.  முகூர்த்தத்துக்குத் தேவையான வெள்ளி மெட்டி, புடவை, வேட்டி, துண்டு, சட்டை ஆகியனவும், பித்தளை காமாட்சி விளக்கு, எவர்சில்வர் குங்குமச் சிமிழ், குடம், சாப்பாட்டு தட்டு, கடாய், அன்னக்கரண்டி, பாய், தலையணை என மொத்தம் 29 பொருள்கள் அரசின் சார்பில் சீர்வரிசைப் பொருள்களாக அளிக்கப்படவுள்ளன.