Chennai Video
Latest Buzz...
Flash News
47th International Film Festival of India
The 47th International Film Festival of India will begin...
Apple CEO Mr Tim called on Mr Modi today
The CEO of Apple Inc., Mr. Tim Cook, called...
Bank employees to go on strike on July 29
Bank employees across the country will go on a...
Cyclone moves towards Bangladesh
Cyclonic winds bypassed the Indian coast and moved towards...
Summer Special Trains
Southern Railway will operate the following Suvidha special trains...

August 11th, 2012
11 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள், புதிய 3 துணை மின்நிலையங்கள்

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கிராமப்புற மாணவ மாணவிகள் உயர் கல்வி மூலம் வேலை வாய்ப்புகள் பெற்று வாழ்க்கையில் சிறப்பான நிலையை அடைந்து தங்களது குடும்பத்தை மேம்படுத்தி அவர்களது பொருளாதார நிலை உயரும் வகையிலும், உயர்கல்வி கற்பதற்காக நகரங்களை நாடி சிரமப்படாமல், அவர்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகிலேயே கல்வி கற்பதற்கு ஏதுவாக அரசு பல கல்லூரிகளைத் தொடங்கி வருகிறது.

இதன் அடிப்படையில், 11 இடங்களில் பல்கலைக்கழக உறுப்பு இருபாலர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்குவதற்கு முதல்- அமைச்சர் ஜெயலலிதா 29.5.2012 அன்று ஆணையிட்டார். அதன்படி, எடப்பாடி, கன்னியாகுமரி, வேடசந்தூர்; மொடக்குறிச்சி, திருமங்க லம், திருவொற்றியூர், பரமக்குடி, கடையநல்லூர், அருப்புக்கோட்டை, நாகப்பட்டினம் மற்றும் அரக்கோணம் ஆகிய 11 இடங்களில் புதிதாக பல்கலைக்கழக உறுப்பு இருபாலர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை முதல்- அமைச்சர் ஜெயலலிதா இன்று காணொலிக் காட்சி மூலமாக தொடங்கி வைத்தார்.

திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கத்தில் 9 கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 110/11 கி.வோ. துணை மின் நிலையம் மற்றும் பெட்டவாய்த் தலையில் 4 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 110/11 கி.வோ. துணை மின் நிலையம்; திருவாரூர் மாவட்டம், உள்ளிக் கோட்டையில் 4 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 110/11 கி.வோ. துணை மின் நிலையம்; தருமபுரி மாவட்டம், பாப்பி ரெட்டிபட்டியில் 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 110/33-11 கி.வோ. துணை மின் நிலையம் ஆகிய நான்கு தரம் உயர்த்தப்பட்ட துணை மின் நிலையங்களையும்; திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டில் 27 கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 230/110/33 கி.வோ. துணை மின் நிலையம்; தேனி மாவட்டம், குள்ளப்ப கவுண்டன்பட்டியில் 6 கோடியே 38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 110/22 கி.வோ. துணை மின் நிலையம்; தஞ்சாவூர் மாவட்டம், கரம்பயத்தில் 33 கோடியே 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 230/110 கி.வோ. துணை மின் நிலையம் ஆகிய மூன்று புதிய துணை மின் நிலையங்கள், என மொத்தம் 94 கோடியே 49 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான ஏழு துணை மின் நிலையங் களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.