Chennai Video
Latest Buzz...
Flash News
47th International Film Festival of India
The 47th International Film Festival of India will begin...
Apple CEO Mr Tim called on Mr Modi today
The CEO of Apple Inc., Mr. Tim Cook, called...
Bank employees to go on strike on July 29
Bank employees across the country will go on a...
Cyclone moves towards Bangladesh
Cyclonic winds bypassed the Indian coast and moved towards...
Summer Special Trains
Southern Railway will operate the following Suvidha special trains...

April 17th, 2012
2.12 லட்சம் மாணவர்களுக்கு “லேப்-டாப்” தமிழக அரசு

சென்னை: உயர்கல்வித் துறைக்கான மானியத்தின் மீது நடந்த விவாதத்துக்கு, அமைச்சர் பழனியப்பன் பதில்அளித்தார்:

சுயநிதி கல்லூரிகளில் (சிறுபான்மையின கல்வி நிறுவனங்கள் உட்பட) அனைத்து வித படிப்புகளுக்கும், இலவச கட்டண இருக்கையில் படிக்கும் ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்கள் பயன்பெறும் வகையில், அவர்களது பெற்றோர்களது ஆண்டு வருமானம், 50 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும் என்று இருந்ததை, 2 லட்ச ரூபாயாக உயர்த்தியுள்ளார் முதல்வர்.
தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள், பொறியியல், மருத்துவம், கால்நடை, கலை மற்றும் அறிவியல் போன்ற படிப்புகளை மேற்கொள்ள, 1000 மாணவ, மாணவியருக்கு, 20.98 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பட்ஜெட் உரையில், மாணவர்களுக்கு இலவசமாக மடிக் கணினி (லேப்-டாப்) வழங்க, 912 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதில், இந்தக் கல்வியாண்டில், இறுதியாண்டு படிக்கும் பொறியியல் மாணவர்கள் 9,301 பேர், கலை மற்றும் அறிவியல் படிக்கும் மாணவர்கள், ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 779 பேர், பாலிடெக்னிக் படிக்கும் மாணவர்கள், 22 ஆயிரத்து 444 பேர் என, மொத்தம் ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 524 மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.
வரும் கல்வியாண்டில், இத்திட்டத்துக்காக, முதல்வர் 1,500 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளார். இதில், உயர்கல்வித் துறைக்கு மட்டும், 2 லட்சத்து 12 ஆயிரத்து 409 மடிக்கணினிகள் வழங்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
யு.ஜி.சி., அறிக்கைப்படி, நமது நாட்டில், 229 பேருக்கு ஒரு கணினி, அதாவது ஒரு கல்லூரிக்கு ஆறு கணினி என்ற விகிதாச்சாரம் உள்ளது.